வெள்ளி, செப்டம்பர் 21, 2012

காஸியாபாத் துப்பாக்கிச்சூடு:போலீஸ் மீதான குற்றச்சாட்டுக்களை நிரூபிக்கும் போஸ்ட் மார்ட்டம் அறிக்கை !

காஸியாபாத்காஸியாபாத்:திருக்குர்ஆன் பிரதியை அவமதித்த சம்பவத்தில் போராட்டம் நடத்தியவர்கள் மீது அநியாயமாக நடத்திய துப்பாக்கிச்சூட்டில் பலியானவர்களின் போஸ்ட் மார்ட்டம் அறிக்கை போலீஸ் மீதான குற்றச்சாட்டுக்களை நிரூபிக்கிறது. 3 சிறுவர்கள் உள்பட 6 பேர் மரணிக்க காரணமான துப்பாக்கிச்சூட்டில் போலீஸ் கடைப்பிடிக்கவேண்டிய நிபந்தனைகள் எதுவுமே பேணவில்லை என்று உள்ளூர் மக்கள் குற்றம் சாட்டியிருந்தனர்.அவர்களுடைய குற்றச்சாட்டுக்களை உறுதிச்செய்யும்
வண்ணமாக போஸ்ட் மார்ட்டம் அறிக்கை அமைந்துள்ளது. 4-10 அடி தொலைவில் இருந்து அதாவது மிக அருகில் இருந்து போலீஸ் துப்பாக்கிச்சூட்டை நடத்தியுள்ளதாக போஸ்ட்மார்ட்டம் அறிக்கை கூறுகிறது.
கடந்த வெள்ளிக்கிழமை இந்த அக்கிரமம் அரங்கேறியது.காஸியாபாத் ரெயில்வே ஸ்டேசன் அருகே கிழிக்கப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்ட திருக்குர்ஆன் பிரதிகளின் பக்கங்களில் முஸ்லிம்கள் வெறுக்கும் பன்றியின் பெயர் இந்தியில் எழுதப்பட்டிருந்தது. இதனால் கொதித்துப்போன முஸ்லிம்கள் போலீஸ் ஸ்டேசனை நடவடிக்கை எடுக்கக்கோரி முற்றுகையிட்டனர். போலீசுக்கும், பொதுமக்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதைத்தொடர்ந்து போலீஸார் கூட்டத்தை கலைக்க எவ்வித முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொள்ளாமலேயே மக்கள் கூட்டத்தை நோக்கி சரமாரியாக சுட்டுள்ளனர். இதில் 3 சிறுவர்கள் உள்பட 6 பேர் அநியாயமாக பலியாகினர். தற்காப்புக்காக சுட்டோம் என்று போலீஸ் கூறினாலும், மக்கள் காவல்நிலையத்தை முற்றுகையிட்டு 5 மணிநேரங்கள் கழித்தே துப்பாக்கிச்சூடு நிகழ்ந்ததாக சம்பவ இடத்தை பார்வையிட்ட ஜம்மியத்துல் உலமாவின் தலைவர்களிடம் உள்ளூர் மக்கள் தெரிவித்தனர்.
மக்கள் கொந்தளித்தால் அவர்களை கலைக்க அதிக படையினரை அழைக்க போதிய அவகாசமிருந்தது. தடியடி, கண்ணீர்புகை, தண்ணீர் பீச்சியடித்தல், வானத்தை நோக்கிச்சுடுதல் போன்ற எவ்வித முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை. முஸ்லிம்கள் என்றவுடன் அவசர அவசரமாக துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர். பலியான 3 பேருக்கு தலையில் குண்டு பாய்ந்துள்ளது. மரணித்த 14 வயதான லுக்மான் என்ற சிறுவனுக்கு 4 அடி தூரத்தில் இருந்து அதாவது மிக அருகாமையில் இருந்து குண்டு பாய்ந்துள்ளது. ஐந்தடி மட்டுமே தொலைவில் இருந்து துப்பாக்கிக் குண்டு தாக்கிய 20 வயதான வஹீத் மற்றும் வஸீமின் மண்டையோடு தகர்ந்து போனதாக போஸ்ட்மார்ட்டம் அறிக்கை கூறுகிறது.
இச்சம்பவத்தைத் தொடர்ந்து எஸ்.ஐ உள்பட சில போலீஸ்காரர்களை உத்தரபிரதேச முதல்வர் அகிலேஷ் யாதவ் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக