புதன், செப்டம்பர் 19, 2012

தீவிரவாத சித்தரிப்பு: புகார்கள் அளிப்பதால் அற்புதங்கள் நிகழ்ந்துவிடாது -அருந்ததி ராய் !

Arundhati Royபுதுடெல்லி:குறிப்பிட்ட பிரிவு மக்களை தீவிரவாதிகளாக சித்தரிப்பது ஜனநாயகத்தின் பிழை அல்ல என்று சமூக ஆர்வலரும், பிரபல எழுத்தாளருமான அருந்ததி ராய் கூறியுள்ளார். பாட்லா ஹவுஸ் போலி என்கவுண்டர் நிகழ்ந்து நான்காம் ஆண்டு நினைவு தினத்தில் ஜாமிஆ டீச்சர்ஸ் சோலிடாரிட்டி அசோசியேசன் சார்பாக தயாரிக்கப்பட்ட அறிக்கையை வெளியிட்டு அவர் உரையாற்றினார். அவர் தனது உரையில் கூறியது: “குறிப்பிட்ட பிரிவினரை தீவிரவாதிகளாக சித்தரிப்பதை ஹிந்து-முஸ்லிம் பிரச்சனையாக கருதமுடியாது. இது அரசியல்
பிரச்சனை. வேண்டுமென்றே அரசு இயந்திரங்களை உபயோகித்து சில பிரிவினரை பீதியில் ஆழ்த்தும் முயற்சிகள் நடக்கின்றன. பிரச்சனைகளுக்கு புகார் அளிப்பதால் அற்புதங்கள் நிகழ்ந்துவிடாது. புகார்களை மட்டுமே அளிப்பதில் நம்மை ஆழ்த்துவதற்கு முயற்சிகள் நடக்கின்றன. இவ்விவகாரம் அதிகாரத்துடன் தொடர்புடையது. அதிகாரத்தை நிலைநாட்டவும், ராணுவ மயமாக்கவும் ஆதிக்க சக்திகள் தீவிரவாதம் என்ற பிரச்சனையை எழுப்புகின்றனர். பாப்ரி மஸ்ஜித் இடிப்பு மற்றும் உலகமயமாக்கலுக்கு பிறகு நாட்டை போலீஸ் ஸ்டேட்டாக மாற்ற முயற்சிகள் தீவிரமாக நடந்துவருகின்றன. குற்றவாளியாக்கி சிறையில் அடைத்துவிட்டு பல ஆண்டுகளுக்கு பிறகு தாமதமாக நீதிக் கிடைத்தால் நாட்டின் அரசியல் கட்டமைப்பு நன்றாக உள்ளது என்று கூற இயலுமா?” என்று அருந்ததி ராய் கேள்வி எழுப்பினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக