அஹ்மதாபாத்:குஜராத் மாநில முதல்வர் நரேந்திர மோடி நிதானம் இழந்துவிட்டார். அவர் நிதானம் இழந்திருந்தால் குஜராத் மாநிலத்துக்கு மட்டுமல்ல, நாட்டுக்கே அபாயம் என்று மத்திய வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சர் ஆனந்த் சர்மா கூறியுள்ளார்.ராகுல் காந்தி தேசிய தலைவர். ஆனால், மோடி மாநில தலைவர் என்று காங்கிரஸ் கட்சியினர் கூறியிருந்தனர். இதற்கு பதிலளித்த மோடி, ராகுல் காந்தி
சர்வதேச தலைவர் என்றும், அவர் இத்தாலி நாட்டு தேர்தலில் கூட போட்டியிடலாம் என்றும் கிண்டலடித்திருந்தார்.
இதுக்குறித்து அஹ்மதாபாத்தில் செய்தியாளர்களிடம் ஆனந்த் சர்மா கூறியது:
ராகுல் காந்தி ஒருபோதும் பிரதமராக விரும்பியதில்லை. மக்களுக்காக சேவை செய்து வருகிறார். அவர் மக்களவை தேர்தலில் நின்று அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். இந்நிலையில், ராகுல் வெளிநாட்டில் நடைபெறும் தேர்தலில் போட்டியிட வேண்டும் என மோடி கூறியிருக்கிறார்.
நிதானம் இழந்ததாலேயே அவர் இப்படி கூறியிருக்கிறார். அவர் அவ்வாறு நிதானம் இழந்திருந்தால் அது குஜராத் மாநிலத்துக்கு மட்டுமல்ல, நாட்டுக்கே அபாயகரமானது.
தான் ஒரு சிறந்த தலைவர் என்று மோடி கருதினால், பீகார், உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட நாட்டின் பிற மாநிலத்தில் போட்டியிட வேண்டும். அதேநேரம், ராகுல் காந்தி குஜராத் உள்ளிட்ட எந்த மாநிலத்திலும் போட்டியிடத் தயார் என்றார் சர்மா.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக