திங்கள், செப்டம்பர் 24, 2012

இரு மடங்கு உயர்கிறது சர்க்கரை விலை.... டாக்டர் மன்மோகன் சிங்கின் அடுத்த ஆப்பு ரெடி !

டெல்லி: நாடு முழுவதும் நியாய விலைக் கடைகளில் விற்கப்படுகின்றன சர்க்கரை விலை இருமடங்கு அதிகரிக்க உள்ளது. இதுவரை ரேஷன் சர்க்கரைக்கு வழங்கி வந்த மானியத்தை மத்திய அரசு நிறுத்திவிட முடிவு செய்கிறதுடெல்லியில் இன்று நடைபெற உள்ள மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ரேசன் சர்க்கரைக்கான மானியத்தை ரத்து செய்ய முடிவெடுக்கப்படுகிறது. இதனால்
ரேசனில் விற்பனை செய்யப்பட்டு வரும் சர்க்கரையின் விலை அப்படியே இரு மடங்காகிவிடும். இதனால் வெளிச்சந்தை விற்பனையில் சர்க்கரை விலை கிடுகிடுவென உயரும் நிலைமை உள்ளது. ரேசனில் தற்போது 1 கிலோ சர்க்கரை ரூ13.50க்கு விற்பனை செய்யப்படுகிறது. மத்திய அரசின் முடிவால் ரூ23 ஆக உயர இருக்கிறது. கடந்த 10 ஆண்டுகளாக ரேசன் சர்க்கரை விலை உயராமல் இருந்தது.
அண்மையில்தான் டீசல் விலை உயர்வு, கேஸ் கட்டுப்பாடு மற்றும் சில்லரை வர்த்தகத்தில் அன்னிய முதலீட்டுக்கு அனுமதி என அதிரடியாக நடவடிக்கைகளை திணித்தது மத்திய அரசு. இப்பொழுது அடுத்த அத்தியாவசியப் பொருட்களில் ஒன்றான சர்க்கரை விலையில் கை வைக்க முடிவு செய்திருக்கிறது.
இப்படி சர்க்கரைக்கான மானியத்தை முழுமையாக ரத்து செய்துவிட்டால் மத்திய அரசுக்கு பல கோடி ரூபாய் லாபம் கிடைக்கும் என்பதால் இந்த நடவடிக்கை என்கின்றன டெல்லி வட்டாரங்கள்.
இதே போல் காப்பீட்டுத் துறையில் அன்னிய நேரடி முதலீட்டுக்கு அனுமதி கொடுக்கவும் மத்திய அரசு இன்று அறிவிக்கக் கூடும் என்று கூறப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக