சென்னை: சென்னை மாநகரின் புதிய காவல்துறை ஆணையராக கூடுதல் டிஜிபி ஜார்ஜ் இன்று பொறுப்பேற்றுக் கொண்டார்.சென்னை காவல்துறை ஆணையராக இருந்து வந்த ஜே.கே.திரிபாதி நேற்று திடீரென மாற்றப்பட்டார். சென்னையில் அமெரிக்காவைக் கண்டித்து இஸ்லாமியர்கள் நடத்தி வந்த தொடர் போராட்டம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதைத் தொடர்ந்து, அதைக் கட்டுப்படுத்தத் தவறியதற்காக திரிபாதி மாற்றப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து புதிய காவல்துறை
ஆணையராக கூடுதல் டிஜிபி ஜார்ஜ் நியமிக்கப்பட்டார். அவர் இன்று தனது பொறுப்புகளை ஏற்றுக் கொண்டார். அவரிடம் பொறுப்புகளை ஒப்படைத்து விட்டு ஜே.கே.திரிபாதி விடை பெற்றார். திரிபாதி, சிறைத்துறை கூடுதல் டிஜிபியாகியுள்ளார்.
சென்னை நகரில் ஏற்கனவே பல்வேறு பொறுப்புகளில் பணியாற்றியவர்தான் ஜார்ஜ். சென்னை வடக்கு மண்டல ஐஜி, மத்திய மண்டல ஐஜி உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளில் இருந்துள்ளார். தற்போது ஆணையராகப் பொறுப்பேற்றுள்ளார்.
சென்னை நகர காவல்துறையின் 98வது போலீஸ் கமிஷனர் ஜார்ஜ் என்பது குறிப்பிடத்தக்கது. பொறுப்பேற்றவுடன் சட்டம் ஒழுங்கு குறித்து உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார் ஜார்ஜ்.
சென்னை நகர காவல்துறையின் 98வது போலீஸ் கமிஷனர் ஜார்ஜ் என்பது குறிப்பிடத்தக்கது. பொறுப்பேற்றவுடன் சட்டம் ஒழுங்கு குறித்து உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார் ஜார்ஜ்.
கமிஷனராகப் பொறுப்பேற்றுக் கொண்ட ஜார்ஜ் மரியாதை நிமித்தமாக முதல்வர் ஜெயலலிதாவை அவரது போயஸ் தோட்ட இல்லத்தில் சந்தித்துப் பேசினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக