செவ்வாய், செப்டம்பர் 25, 2012

மத்திய அரசை எதிர்த்து டெல்லியில் போராட்டம். மம்தாவின் அறிவிப்பால் காங்கிரஸ் அதிர்ச்சி !

மத்திய அரசைக் கண்டித்து தில்லி ஜந்தர் மந்தர் பகுதியில் அக்டோபர் 1 ஆம் தேதி போராட்டம் நடத்தப் போவதாக மேற்கு வங்க முதல்வரும், திரிணமூல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார்.இது குறித்து அவர் ஃபேஸ்புக் இணையதளத்தில் தெரிவித்திருப்பதாவது:÷ சில்லறை வர்த்தகத்தில் அன்னிய நேரடி முதலீட்டுக்கு அனுமதி, டீசல் விலை உயர்வு, சமையல் எரிவாயு
சிலிண்டர் விநியோகத்துக்கு கட்டுப்பாடு ஆகிய மக்கள் விரோத நடவடிக்கைகளை மத்திய அரசு உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும்.இக்கோரிக்கைகளை வலியுறுத்தி எனது தலைமையில் தில்லியில் உள்ள ஜந்தர் மந்தரில் அக்டோபர் 1 ஆம் தேதி மதியம் போராட்டம் நடைபெறும்.
மத்திய அரசின் தவறான கொள்கை முடிவுகளை எதிர்ப்பதில் நாம் அனைவரும் இணைந்து செயல்பட வேண்டும். ஜனநாயகத்தில் மக்கள்தான்  தலைவர்கள். மக்களின் குரலைத்தான் நாங்கள் பிரதிபலிக்கிறோம். எங்களுக்கு ஆதரவு அளித்துவரும் அனைவருக்கும் எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்'' என்றார்.மத்திய அரசுக்கு அளித்துவந்த ஆதரவை கடந்த வெள்ளிக்கிழமை மம்தா பானர்ஜி திரும்பப் பெற்றார். அதைத் தொடர்ந்து காங்கிரûஸ எதிர்த்து அவர் நடத்தும் முதல் போராட்டம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக