டெல்லி: ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசுக்கு ஆதரவு தருவது குறித்து நாளை முடிவு எடுக்கப்படும் என்று சமாஜ்வாடித் தலைவர் முலாயம் சிங் யாதவ் தெரிவித்துள்ளார். மமதா பானர்ஜி அரசுக்குக் கொடுத்து வந்த ஆதரவைத் திரும்பப் பெற்று விட்டதால் மத்திய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு பெரும்பான்மை பலத்தை இழந்து சிறுபான்மை அரசாக மாறியுள்ளது. இதையடுத்து தற்போது அரசைக் காக்க சமாஜ்வாடி கட்சி, பகுஜன் சமாஜ் கட்சி ஆகியவற்றின் தயவை காங்கிரஸ் நம்பியுள்ளது. இவர்கள் ஆதரவு
கொடுக்காவிட்டால் ஆட்சி கவிழும் நிலை ஏற்பட்டுள்ளது.
சமாஜ்வாடிக் கட்சிக்கு லோக்சபாவில் 22 எம்.பிக்கள் உள்ளனர். பகுஜன் சமாஜ் கட்சிக்கு 21 எம்.பிக்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்து.
இந்த நிலையில், சமாஜ்வாடிக் கட்சி தனது முடிவை நாளை அறிவிக்கவுள்ளதாக தெரிவித்துள்ளது. இதுகுறித்து அக்கட்சித் தலைவர் முலாயம் சிங் யாதவ் கூறுகையில், சமாஜ்வாடிக் கட்சியின் எம்.பிக்கள் கூட்டம் நாளை நடைபெறுகிறது. அதில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசுக்கு ஆதரவு தருவது குறித்து முடிவெடுத்து அறிவிப்போம் என்றார்.
பாரத் பந்த் போராட்டத்தில் உங்களது கட்சி பங்கேற்குமா என்ற கேள்விக்கு பங்கேற்போம் என்று தெரிவித்தார் சிங்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக