வியாழன், செப்டம்பர் 20, 2012

பாபு பஜ்ரங்கி மீது தாக்குதல் நடத்தப்பட்டதா? அனுதாபத்தை தேட சங்க்பரிவாரின் சூழ்ச்சி !

அஹ்மதாபாத்:குஜராத் இனப்படுகொலையின் போது நிகழ்த்தப்பட்ட நரோடா பாட்டியா கூட்டுப் படுகொலை வழக்கில் மரணம் வரை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட இந்தியா வரலாறு கண்ட மிகப்பெரிய பயங்கரவாதியான பாபு பஜ்ரங்கியை முஸ்லிம் சிறைக் கைதிகள் தாக்கியதாக கூறி சங்க்பரிவார்கள் அனுதாபம் தேடும் சூழ்ச்சியில் ஈடுபட்டுள்ளனர்.சங்க்பரிவார்களுக்கு சில சிறை அதிகாரிகளும் துணை போகின்றனர். கடந்த செவ்வாய்க்கிழமை சிகிட்சைக்காக
மருத்துவமனைக்குச் சென்ற பாபு பஜ்ரங்கிங்குக்கும், மருத்துவமனையில் வைத்து கோத்ரா ரெயில் எரிப்பு வழக்கு மற்று குண்டுவெடிப்பு வழக்குகளில்  அநியாயமாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் முஸ்லிம்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனை மோதலாக சித்தரித்துள்ளனர் சிறை அதிகாரிகள்.
இதனைத்தொடர்ந்து விசுவஹிந்து பரிஷத் என்ற ஹிந்துத்துவா பயங்கரவாத அமைப்பு சிறைக்கு முன்பாக தர்ணா போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்துள்ளது. இதுக்குறித்து அவ்வமைப்பின் அகில உலக பொதுச்செயலாளரான பிரவீன் தொகாடியா கூறுகையில், “உயர் பாதுகாப்பு மிக்க சிறை உள்பட குஜராத்தின் எந்த பகுதியிலும் ஹிந்துக்களுக்கு பாதுகாப்பு இல்லை” என்ற உலகமாக ஜோக்கை உதிர்த்துள்ளார்.
ஆனால், இச்சம்பவம் தொடர்பாக பாபு பஜ்ரங்கி இதுவரை எவ்வித புகாரும் அளிக்கவில்லை. இச்சம்பவம் குறித்து சிறை சூப்பிரண்ட் கூறுகையில், “பாபு பஜ்ரங்கியை யாரும் தாக்கவில்லை. பாபு பஜ்ரங்கிக்கும், இதர கைதிகளுக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் மட்டுமே நடந்தது. நாங்கள் இதுக்குறித்து விசாரிக்க உத்தரவிட்டுள்ளோம்.” என்று தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக