வெள்ளி, செப்டம்பர் 28, 2012

பரிசுப் பொருட்களை திரும்ப ஒப்படைக்க வேண்டும். பிரதிபா பட்டேலுக்கு அரசு உத்தரவு !

பிரதீபா பாட்டீல் குடியரசுத் தலைவராக இருந்தபோது அவருக்கு கிடைத்த பரிசுப் பொருட்களை அரசிடம் ஒப்படைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
முன்னாள் குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல் தனது பதவிக்காலம் முடிந்து ராஷ்ட்ரபதி பவனை விட்டு வெளியேறுகையில் கிட்டத்தட்ட 40 லாரிகளில் தனக்கு கிடைத்த பரிசுப் பொருட்களை ஏற்றிச் சென்றார். அந்த பொருட்கள் மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள அவரது சொந்த ஊரான அமராவிதியில் உள்ள
அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளது.
அந்த அருங்காட்சியகத்தை அவரது மகனும், காங்கிரஸ் எம்.எல்.ஏ.வுமான ராஜேந்திர சிங் ஷெகாவத் நடத்தி வருகிறார்.
இந்நிலையில் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் சுபாஷ் சந்திர அகர்வால் என்பவர் பிரதீபா பாட்டீல் குடியரசுத் தலைவராக இருந்தபோது பெறப்பட்ட பரிசுப் பொருட்கள் குறித்து விவரம் கேட்டிருந்தார்.
அவருக்கு அனுப்பப்பட்ட பதிலில் கூறியிருப்பதாவது,
பிரதீபா பாட்டீல் குடியரசுத் தலைவராக இருந்தபோது அவருக்கு கிடைத்த பரிசுப்பொருட்கள் அவருடைய மகனுக்கு சொந்தமான அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளன என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இது குறித்து அகர்வால் கூறுகையில், பிரதீபா பாட்டீலுக்கு கிடைத்த பரிசுப் பொருட்களை அவர் ஒப்படைக்க வேண்டும் என்று குடியரசுத் தலைவரானவுடன் பிரணாப் முகர்ஜி முடிவு செய்தார். இதையடுத்து குடியரசுத் தலைவர் செயலகம் அந்த பரிசுப் பொருட்களை ஒப்படைக்குமாறு பிரதீபா பாட்டீலை கேட்டுள்ளது. இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்றார்.
பிரதீபா தனது 5 ஆண்டு பதவிக்காலத்தில் ரூ.205 கோடி செலவில் 22 நாடுகளில் சுற்றுப்பயணம் செய்தது பெரும் சர்ச்சையானது என்பது குறிப்பிடத்தக்கது. இதுவரை குடியரசுத் தலைவராக இருந்த யாரும் இவ்வளவு செலவில் இத்தனை நாடுகளுக்கு சென்றதில்லை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக