ஹைதராபாத் : ஹைதராபாத்தின் புகழ் பெற்ற சார்மினார் அருகே கோவில் கட்ட வேண்டும் என்று பாஜக கோரியதை தொடர்ந்து சில வாரங்களாக அங்கு பதற்றம் நிலவி வருகிறது. சார்மினார் வளாகத்தினுள் கோவில் கட்ட வேண்டும் என்று பாஜகவின் கோரிக்கையை தொடர்ந்து பாஜகவின் மிரட்டலை காங்கிரஸ் அலட்சியப்படுத்துகிறது என்று கூறி காங்கிரஸுக்கு கொடுத்த வந்த ஆதரவை மஜ்லிஸே இத்திஹாதுன் முஸ்லீமின் அமைப்பு வாபஸ் பெற்றுள்ளது. இச்சூழலில் நிருபர்களுக்கு நேற்று பேட்டியளித்த விசுவ இந்து பரிஷத் தலைவர் பயங்கரவாதி பிரவீன் தொகாடியா சார்மினாரில் பாக்கியலஷ்மி கோவில் அமைப்பது கோடிக்கணக்கான இந்துக்களின் உரிமை பிரச்னை என்றும் கோவில் கட்டுவதை முஸ்லீம்கள் தடுக்க நினைத்தால் அயோத்தியில் பாபர் மசூதியை இடித்து தரை மட்டமாக்கியதை போல் லட்சக்கணக்கான மக்களை திரட்டி கோவில் கட்டுவோம் என்றார்.
மேலும் முஸ்லீம்களின் எதிர்ப்புக்கு பணிந்து கோவில் தரிசனத்தை காவல்துறை தடுப்பதாகவும் முஸ்லீம்கள் கோவில் கட்ட அனுமதிக்கா விட்டால் சார்மினார் தவிடு பொடியாவதுடன் முஸ்லீம்கள் பின் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்றும் பயங்கரவாதி பிரவீன் தொகாடியா கொக்கரித்துள்ளான்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக