புதன், டிசம்பர் 26, 2012

பலாத்கார பாதிப்புக்குள்ளான பெண்ணை மருமகளாக ஏற்கும் மனநிலை இருக்கிறதா?: மீராகுமார் !

டெல்லி: நமது சமூகத்தில் பெண்களைப் பற்றிய மனநிலை மாற வேண்டும் என்று லோக்சபா சபாநாயகர் மீராகுமார் வேண்டுகோள் விடுத்துள்ளார். டெல்லியில் நிகழ்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய மீராகுமார், மாணவி பலாத்காரம் செய்யப்பட்டது போன்ற சம்பவங்களால் மக்கள் நிச்சயம் கொந்தளிப்பார்கள். ஆனால் அந்த கோபம் வன்முறைக்குப் போய்விடக் கூடாது. சமுதாயத்தில் பெண்கள் மீதான மதிப்புமிக்க விழுமியங்களை அறிவார்ந்த சமூகம் மீட்டு எடுக்க வேண்டும். வீட்டிலும் வெளியிலும் ப்ண்கள் பலவகை அநீதிக்குட் படுத்தப்படுகின்றனர். வீடுகளில் பெண்களின் பெயர் ரேஷன் கார்டுகளில் இடம்பெறுவதில்லை. காரணம் திருமணத்துக்கு பிறகு சொத்தில் பங்கு கேட்டுவிடுவாள் என்ற அச்சம். சமூகத்தில் பெண்களைப் பற்றிய பார்வை மாற வேண்டும். பாலியல் பலாத்காரத்துக்குட்படுத்தப்பட்ட ஒரு பெண்ணை நம் வீட்டு மருமகளாக ஏற்கக் கூடிய மனம் நமக்கு இருக்கிறதா? என்று கேள்வி எழுப்பியிருக்கிறார் அவர்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக