தலித் இன இளம் பெண்ணை சிதம்பரம் அருகே முட்லூர் என்ற கிராமத்தைச் சேர்ந்த மூன்று பேர் கற்பழித்துக் கொன்றுள்ளனர். ஆனால் போலீசார் இதனை மாடியிலிருந்து குதித்து தற்கொலை என்று பதிவு செய்துள்ளதால் விடுதலைச் சிறுத்தைகள் போராட்டத்தில் களமிறங்கியுள்ளது. சிதம்பரம் அருகே உள்ள முட்லூர் என்ற இடத்திற்கு அருகில் உள்ள சம்பந்தம் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் சந்தியா (வயது 20). ஸ்டுடியோ ஒன்றில் வேலை பார்த்து வந்தார். நேற்று மாலை 4 மணிக்கு அந்தப் பெண்ணை மூன்று பேர் கொண்ட கும்பல் அந்த ஸ்டுடியோவில் வைத்தே கற்பழித்துள்ளது. பின்னர் அந்தப் பெண்ணை கடுமையாகத் தாக்கியதோடு, மூன்றாவது மாடியிலிருந்து கீழே தள்ளி கொன்றுவிட்டதாகக் கூறப்படுகிறது. அந்தப் பெண் படுகாயமடைந்து உயிருக்கு போராடிய நிலையில் கடலூர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். உயிருக்குப் போராடிய நிலையிலும், தன்னைக் கெடுத்தவர்கள் மற்றும் தள்ளயவர்களை அடையாளம் காட்ட தயார் என்று சந்தியா போலீசாரிடம் தெரிவித்துள்ளார். ஆனால் அந்த பெண் மாடியிலிருந்து விழுந்து தற்கொலை செய்துக்கொண்டதாக போலீசார் வழக்குப் பதிவு செய்ததாகக் கூறப்படுகிறது. வன்புணர்ச்சிச் செய்து படுகொலை செய்யப்பட்ட தலித் பெண்ணுக்கு நீதி கேட்டு விடுதலைச் சிறுத்தைகள் இப்போது சாலை மறியல் உள்ள போராட்டங்களில் இறங்கியுள்ளது. சந்தியாவைக் கெடுத்த மூன்று பேரும் வேறு சாதியைச் சேர்ந்தவர்கள். டெல்லியில் ஒரு பெண் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதற்கு நாடே கொந்தளித்து வரும் நிலையில், தமிழகத்தில் அதற்குப் பிறகு தொடர்ந்து நான்காவது கற்பழிப்பு மற்றும் கொலை சம்பவம் அரங்கேறியிருக்கிறது. போலீசோ அதை தற்கொலை என மாற்றுகிறது. ஊடகங்களும் கண்டு கொள்ளவே இல்லை. என்னதான் நடக்கிறது?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக