நண்பரிடம் 30 முட்டைகள் பச்சையாக சாப்பிடுவதாக போட்டி போட்ட இளைஞர் ஒருவர் 28 முட்டைகள் சாப்பிட்டவுடன் திடீரென மரணம் அடைந்தார். இந்த துயர சம்பவம் வட ஆப்பிரிக்க நாடான துனிஷியா நாட்டில் நடந்துள்ளது.துனிஷியா நாட்டை சேர்ந்த Dhaou Fatnassi, என்ற 20 வயது இளைஞர் ஒருவர், தன்னுடைய நண்பருடை விளையாட்டாக, தான் ஒரே நேரத்தில் 30 முட்டைகளை சாப்பிடுவதாக போட்டி ஒன்றில் ஈடுபட்டார். நண்பரும் அதற்கு உடன்பட்டு, 30 முட்டைகளை சாப்பிட்டால் தான் ஒரு பெரும்தொகை தருவதாக வாக்களித்து, உடனே 30 கோழி முட்டைகளை வாங்கி வந்தார். மிகுந்த ஆர்வத்துடன் 28 முட்டைகளை சாப்பிட்டவுடன், கடுமையான வயிற்றுவலிக்கு ஆளாகி, திடீரென மயக்கமடைந்து கீழே விழுந்தார்.உடனடியாக அவர் அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அவருக்கு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் அவர் சிகிச்சைக்கு பலனின்றி பரிதாபமாக இறந்தார். முட்டையை வேகவைத்து சாப்பிட்டால் மட்டுமே, அதிலுள்ள பாக்டீரியா நீக்கப்படும் என்றும், இல்லையேல் அது விஷமாக மாறி, மனிதனின் உயிரை பறிக்கக்கூடிய அபாயம் இருப்பதாக மருத்துவர்கள் இதுகுறித்து கருத்து தெரிவித்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக