சனி, மார்ச் 24, 2012

திருமணத்திற்கு பிறகு சொத்து வாங்கினால் மனைவிக்கு பங்கு. வருகிறது மத்திய அரசின் புதுசட்டம் !

திருமண சட்டங்களை மத்திய அரசு மாற்றி அமைத்துள்ளது. இதன்மூலம், திருமணத்திற்கு பிறகு கணவர் பெயரில் வாங்கும் சொத்துக்களில், மனைவிக்கும் பங்கு உண்டு. இந்தத் திருத்தப்பட்ட சட்ட மசோதா, இந்த வாரம் அமைச்சரவையின் ஒப்புதலுக்கு வருகிறது.
"திருமண சட்டங்கள் திருத்த மசோதா 2010' இரண்டாண்டுகளுக்கு முன், ராஜ்யசபாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. பின்னர், சட்டம் மற்றும் நீதித்துறை தொடர்பான
பார்லிமென்ட் நிலைக்குழுவின் பரிசீலனைக்கு அனுப்பப்பட்டது. அந்தக் குழுவும் தன் பரிந்துரைகளை அளித்தது. அவற்றில், நான்கு முக்கிய பரிந்துரைகளை மத்திய அரசு ஏற்றுக் கொண்டுள்ளது.

அதன் விவரம் வருமாறு: திருமணத்திற்கு பிறகு கணவர் பெயரில் வாங்கும் சொத்துக்களில், மனைவிக்கும் பங்கு உண்டு. அதேபோல், ஒரு குழந்தையைத் தத்தெடுத்த தம்பதியர், அதன்பின் விவாகரத்து பெற நேரிட்டால், அந்தத் தத்து குழந்தைக்கும், மற்ற குழந்தைகளைப் போல சொத்தில் பங்கு பெற உரிமை வழங்கப்பட்டுள்ளது. மேலும், ஒரு பெண் விவாகரத்து பெற்றாலும், கணவரின் சொத்துக்களில் பங்கு பெற உரிமையுண்டு. இருந்தாலும், எந்த அளவுக்கு சொத்தில் உரிமை பெறலாம் என்பதை, ஒவ்வொரு தனிப்பட்ட வழக்குகளின் அடிப்படையில் கோர்ட்டுகளே முடிவு செய்யலாம். ஒரு தம்பதியரில் விவாகரத்து கோரி கணவன் மனு தாக்கல் செய்தால், அதை மனைவியானவர் எதிர்க்கும் வகையில், புதிய சட்ட விதிகள் சேர்க்கப்பட்டுள்ளன. அதேநேரத்தில், தம்பதியரில் மனைவியானவர் விவாகரத்து கோரி கோர்ட்டை அணுகினால், கணவர் அதை எதிர்க்க முடியாது. இவ்வாறு பரிந்துரைகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் திருத்தப்பட்ட சட்ட மசோதா, இந்த வாரம் அமைச்சரவையின் ஒப்புதலுக்கு வருகிறது.

2 கருத்துகள்:

  1. பதிக்கபடப்போகும் சமூகம்(ஆண்)27 மார்ச், 2012 அன்று 2:36 PM

    அப்படினா ஆண்கள் பாதிக்கப்பட்டா எந்த பிரச்சனையும் இல்ல அப்படித்தானே சொல்லி வாரானுக இந்த முட்டா பயலுக,எவன்டா இந்த முட்ட தனமான யோசனை எல்லாம் சொல்லுறது ஒட்டு போட்ட மக்களே அறிவு கேட்ட தலைவனையும் அறிவு கேட்ட தலைவிகளையும் தேர்ந்து எடுத்த இப்படித்தான் அவதி படனும்?????????????????

    பதிலளிநீக்கு
  2. பாதிக்கப்படப்போகும் சமூகம்(ஆண்)27 மார்ச், 2012 அன்று 2:37 PM

    அப்படினா ஆண்கள் பாதிக்கப்பட்டா எந்த பிரச்சனையும் இல்ல அப்படித்தானே சொல்லி வாரானுக இந்த முட்டா பயலுக,எவன்டா இந்த முட்ட தனமான யோசனை எல்லாம் சொல்லுறது ஒட்டு போட்ட மக்களே அறிவு கேட்ட தலைவனையும் அறிவு கேட்ட தலைவிகளையும் தேர்ந்து எடுத்த இப்படித்தான் அவதி படனும்

    பதிலளிநீக்கு