கூடங்குளம் அணு மின் நிலையத்தை மூட வேண்டும்; 144 தடை உத்தரவை திரும்பப் பெற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, நெல்லை, கன்னியாகுமரி, தூத்துக்குடி ஆகிய 3 மாவட்டங்களை சேர்ந்த மீனவர்கள் இன்று முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கூடங்குளம் பகுதியில் பிறப்பிக்கப்பட்டுள்ள 144 தடை
உத்தரவை உடனடியாக நீக்க வேண்டும்; கூடங்குளம் போராட்டம் தொடர்பாக கைது செய்யப்பட்டவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்; கூடங்குளம் அணுமின் நிலையத்தை மூட வேண்டும்; கூடங்குளத்தில் குவிக்கப்பட்ட போலீஸாரை வெளியேற்ற வேண்டும் ஆகிய கோரிக்கைகளை மீனவர்கள் வலியுறுத்தியுள்ளனர். இந்தத் கோரிக்கைகளை வலியுறுத்தி, மூன்று மாவட்ட மீனவ கிராமங்களில், அமைதியான முறையில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
இதனிடையே, தமிழக அரசின் அனுமதியைத் தொடர்ந்து, கூடங்குளம் அணுமின் நிலையப் பணிகள் முழுவீச்சி நடைபெற்று வருகிறது.
அதேவேளையில், இடிந்தகரையில் ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் போராட்டத்தை தொடர்ந்துள்ளனர்.
அங்கு, அணு உலை எதிர்ப்புக் குழு தலைவர் புஷ்பராயன், ஒருங்கிணைப்பாளர் உதயகுமார் உள்பட 15 பேர் இன்று நான்காவது நாளாக காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொண்டுள்ளனர்.
கூடங்குளத்தில் வரலாறு காணாத பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ஆயிரக்கணக்கான தமிழக போலீஸாருடன், மத்திய படையினரும் குவிக்கப்பட்டுள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக