இஸ்லாமாபாத்:ஆப்கானிஸ்தானில் நேட்டோ ராணுவத்திற்கு பாகிஸ்தான் வழியாக சரக்குகள் கொண்டு செல்வதற்கான பாதையை திறக்க அரசு முயற்சிப்பதை கண்டித்து தலைநகரான இஸ்லாமாபாத்தில் பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்ற பிரம்மாண்ட பேரணி நடைபெற்றது. நேட்டோவுக்கு பாதையை திறக்கும் பாக்.அரசின் முயற்சியை அங்கீகரிக்க
முடியாது என்றும், எதிர்ப்புகளை புறக்கணித்து அரசு பாதையை திறக்க முயற்சித்தால் நாடு முழுவதும் போராட்டம் நடத்தப்படும் என்றும் பேரணியில் உரை நிகழ்த்திய லஷ்கர் ஸ்தாபகர் ஹாஃபிஸ் முஹம்மது ஸயீத் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ஆப்கான் எல்லையில் 24 பாகிஸ்தான் வீரர்களை நேட்டோ ராணுவம் படுகொலைச் செய்தது. இதனைத் தொடர்ந்து நேட்டோவுக்கு சரக்கு கொண்டு செல்லும் பாதையை பாகிஸ்தான் அரசு மூடியது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக