நியூயார்க்: ஐ.நா., பாதுகாப்புக் கவுன்சிலில் சிரியா மீதான தீர்மானத்திற்கு ரஷ்யாவும், சீனாவும் ஒப்புக் கொண்டுள்ளன. சிரியா தனது வன்முறையைத் தொடர்வதை இனியும் உலகம் பொறுத்துக் கொள்ளாது என, ஐ.நா., பொதுச் செயலர் பான் கி மூன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
சிரியாவுக்கு இதுவரை பலமான ஆதரவாக இருந்து வந்த ரஷ்யா, தற்போது தனது நிலையில் இருந்து சற்று இறங்கி வந்துள்ளது. சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் வேண்டுகோளை ஏற்று, ஒரு நாளைக்கு இரு மணி நேரம் போர் நிறுத்தம் அறிவிக்கப்பட வேண்டும் என முதலில் ரஷ்யா தெரிவித்தது. அதையடுத்து, நேற்று முன்தினம் பேசிய ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்கெய் லாவ்ரோவ், முதலில் நடந்த அமைதியான ஆர்ப்பாட்டங்களை சிரிய அதிபர் தவறான முறையில் அணுகியதாகவும், தொடர்ந்து தவறு மேல் தவறு செய்து வருவதாகவும் தெரிவித்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக