அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட உடன்பிறவா தோழி சசிகலா மீதான கட்சி ரீதியான நடவடிக்கைகள் ரத்து செய்யப்படுவதாக ஜெயலலிதா அறிவித்துள்ளார். எனினும் சசிகலாவின் உறவினர்கள் மீதான நடவடிக்கையில் மாற்றம் இல்லையென்றும் தெரிவித்துள்ளார். இதன் மூலம் மீண்டும் ஜெ-சசி உறவு நீடிக்கும் என்ற வதந்திகள் உணமையாக்கப்பட்டுள்ளது.
இது குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள தமிழக முதல்வரும், அதிமுகவின் பொது செயலருமான ஜெயலலிதா, தவறு செய்துள்ள உறவினர்களின் உறவை துண்டித்து கொள்வதாக சசிகலா வெளியிட்டுள்ள அறிக்கையை ஏற்று கொள்வதாகவும்,
இதன் மூலம் கட்சி ரீதியான நடவடிக்கைகளை ரத்து செய்வதாக அறிவித்துள்ளார். ஜெயலலிதாவும் சசிகலாவும் மீண்டும் போயஸ் தோட்டத்தில் சந்தித்தாகவும், எந்நேரத்திலும் அவர்களின் உறவு தொடர வாய்ப்புண்டு என கடந்த சில வாரங்களாக பத்திரிக்கைகள் செய்திகள் வெளியிட்டன. இதனால் எம்ஜிஆரின் தீவிர விசுவாசிகள் மற்றும் சசி குரூப்பால் ஒதுக்கி வைக்க்பபட்டு தற்போது முக்கியத்துவம் பெற்ற நிர்வாகிகள் கலக்கத்தில் இருந்து வந்தனர். தற்போது உறவு மீண்டு தொடரும் என்ற அறிவிப்பை தொடர்ந்து, அவர்களின் நிலை என்ன என்பது போக போக தெரியும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக