வெள்ளி, மார்ச் 23, 2012

அமெரிக்காவின் இரட்டை வேடம்: இலங்கை ஆதரவு நாடுகள்

ஜெனிவா : இன்று நடைபெற்ற ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை குழுவில் இலங்கையில் நடைபெற்ற போர்க்குற்றங்கள் முறையாக விசாரிக்கப்பட வேண்டும் என்று இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானம் ஓட்டெடுப்பில் இந்தியா ஆதரவுடன் வென்றது. புலிகளுக்கு எதிரான போரில் இலங்கை அரசின் மனித
உரிமைகள் மீறல்களுக்கு எதிராக அமெரிக்கா ஐ.நாவில் தீர்மானம் கொண்டு வந்தது. இலங்கைக்கு உதவியதாக சொல்லப்படும் இந்தியா வழக்கம் போல் இலங்கைக்கு ஆதரவாகவோ அல்லது வெளிநடப்போ செய்யும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தமிழகத்தில் அதிமுக, திமுக உள்ளிட்ட அனைத்து கட்சிகளின் அழுத்தத்தால் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்கும் என அறிவித்தது.தீர்மானத்துக்கு ஆதரவாக 24 வாக்குகளும், எதிர்ப்பாக 15 வாக்குகளும் விழுந்தன. 8 நாடுகள் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளவில்லை. சீனா, பாகிஸ்தான், ரஷ்யா, கிரிகிஸ்தான், தாய்லாந்து, மாலத்தீவு, நைஜீரியா, உகாண்டா, க்யூபா, ஈக்வடார் போன்ற நாடுகள் இலங்கைக்கு ஆதரவாக தீர்மானத்தை எதிர்த்து வாக்களித்தன.  எதிராக வாக்களித்த நாடுகள்  ஈராக் மற்றும்  ஆப்கனில் ஒரு நிலைப்பாடும் இலங்கையில் இன்னொரு நிலைப்பாட்டையும் கொண்டிருக்கும் அமெரிக்காவின் இரட்டை வேடத்தை மிகக் கடுமையாக கண்டித்து தங்களது கண்டனங்களை தெரிவித்தன.ஆனால் இந்தியாவோ இலங்கையில் நடந்த மனித உரிமை மீறல்களை ஏற்க முடியாது என்று கூறி தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களித்தது. அமெரிக்கா, இங்கிலாந்து, பங்களாதேஷ், பெல்ஜியம், உருகுவே போன்ற பெரும்பாலான நாடுகள் ஆதரித்ததால் இலங்கைக்கு எதிரான தீர்மானம் வெற்றிகரமாக நிறைவேறியது. இத்தீர்மானம் தோற்கடிக்கப்பட இலங்கை மும்முரமாக பணியாற்றியது குறிப்பிடத்தக்கது.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக