செவ்வாய், மார்ச் 27, 2012

ராணுவ வாகனங்கள் வாங்கிட ரூ .14 கோடி பேரம்: தளபதி சிங் திடுக் தகவல்; பார்லி.,யில் அமளி


புதுடில்லி: கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் ராணுவத்திற்கு வாகனங்கள் உள்ளிட்ட தளவாட சாமான்கள் வாங்குவதற்கு ரூ. 14 கோடி லஞ்சம் வழங்குவதாக ஒரு புரோக்கர் மூலம் தன்னிடம் பேரம் பேசப்பட்டதாக ராணுவ தளபதி வி.கே., சிங் கூறியுள்ளார். இதனால் பெரும் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.


சுமார் 600 வாகனங்கள் வாங்குவதற்காக இதற்கென புரோக்கராக செயல்பட்ட அதிகாரி ஒருவர் மூலம் தன்னிடம் பேசினார். இது குறித்து நான் பாதுகாப்பு அமைச்சகத்திடம் தெரிவித்துள்ளேன் .விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்றார். ஒரு ஆங்கில நாளிதழுக்கு அளித்துள்ள பேட்டியில் இவ்வாறு அவர் கூறியுள்ளார். இந்த விவகாரம் மத்திய அரசுக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தியிருக்கிறது.

பார்லி.,அவையில் அமளி ஒத்திவைப்பு : ராணுவ தளபதி வி.கே,தெரிவித்துள்ள லஞ்சப்புகார் குறித்து எதிர்கட்சிகள் இன்று பார்லி., இரு அவைகளிலும் எழுப்பின. இதனால் கடும் அமளி ஏற்பட்டது. தொடர்ந்து இரு அவைகளும் ஒத்தி வைக்கப்பட்டது. இது குறித்து அரசு விளக்கம் அளிக்க வேண்டும் உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றும் கோரினர். இது குறித்துகருத்து தெரிவித்த காங்., மத்திய அமைச்சர்களில் ஒருவரான அம்பிகா சோனி கூறுகையில் ; இது மிக சீரியசான விஷயம் . இது குறித்து தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் .

சி.பி.ஐ.,விசாரணைக்கு உத்தரவு: பார்லியில் இந்த விவகாரம் எழுப்பபட்டதை அடுத்து இது குறித்து சி.பி.ஐ.,விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதாக பாதுகாப்பு துறை அமைச்சர் ஏ.கே,அண்டனி கூறியுள்ளார்.

வி.கே.,சிங் கடந்த சில மாதங்களுக்கு முன்னதாக மத்திய அரசை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் தனது வயது விவகாரம் தொடர்பாக வழக்கு தொடர்ந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக