புதன், மார்ச் 21, 2012

கர்நாடகாவை தொடர்ந்து குஜராத் சட்டசபையில் ஆபாச படம் பார்த்த 2 எம்.எல்.ஏ.க்கள்


Gujarat-porn-scandal-295x200   கர்நாடக சட்டசபையில் கடந்த கூட்டத் தொடரின் போது 2 மந்திரிகள் செல்போனில் ஆபாச படம் பார்த்தனர். சட்டசபை நிகழ்ச்சிகளை தூர்தர்ஷன் மற்றும் தனியார் தொலைக்காட்சிகள் படம் எடுத்து ஒளிபரப்பிய போது 2 மந்திரிகள் ஆபாச படம் பார்த்துக் கொண்டு இருப்பது தெரிய வந்தது. இதனால் அந்த 2 மந்திரிகளும்
பதவி இழந்தனர்.
அவர்களுக்கு செல்போனில் ஆபாச காட்சியை அனுப்பிய மற்றொரு மந்திரியும் நீக்கப்பட்டார். இது ஆளும் பாரதீய ஜனதா கட்சிக்கு கடும் நெருக்கடியை கொடுத்தது. 3 மந்திரிகளை நீக்கியதால் கட்சிக்கு ஏற்பட்ட கெட்ட பெயரை கழுவியது. 


இந்த நிலையில் குஜராத்திலும் 2 பாரதீய ஜனதா எம்.எல்.ஏ.க்கள் செல்போனில் ஆபாச படம் பார்த்த தகவல் வெளியாகியுள்ளது. நேற்று குஜராத் மாநில சட்டசபை கூட்டம் காந்தி நகரில் நடந்து கொண்டு இருந்த போது பாரதீய ஜனதா எம்.எல்.ஏ.க்கள் சங்கர் சவுத்திரி, ஜீத்தாபாய் பார்வார் ஆகியோர் செல்போனில் ஆபாச படம் பார்த்தனர். 

சட்டசபை நிகழ்ச்சிகள் பற்றி செய்தி சேகரிக்க சென்ற நிருபர்கள் இதை கவனித்து விட்டனர். உடனே அவர்கள் சபாநாயகரிடம் இது பற்றி புகார் செய்தனர். உடனே சபாநாயகர் அந்த 2 எம்.எல்.ஏ.க்களையும் எச்சரிக்கை செய்தார். 

ஆனால் 2 எம்.எல்.ஏ.க்கள் மீதும் நடவடிக்கை எதுவும் எடுக்க வில்லை. பின்னர் நிருபர்கள் கூறும்போது சங்கர் சவுத்திரி எம்.எல்.ஏ. செல்போனுடன் சட்டசபை கூட்டத்துக்கு வந்தார். அவர் இருக்கையில் அமர்ந்து செல்போனில் ஆபாச படம் பார்த்துக் கொண்டு இருந்தார். அதை பின்னால் அமர்ந்து இருந்த ஜித்தா பார்வார் எம்.எல்.ஏ.வும் எட்டிப் பார்த்து ரசித்தார். அவர்களைப் பற்றி நாங்கள் புகார் கூறியதும் சபாநாயகர் எச்சரிக்கை மட்டும் செய்தார். நடவடிக்கை எடுக்காமல் விட்டு விட்டார் என்றனர். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக