வாஷிங்டன்:இஸ்ரேல் உளவாளி என்று கூறி தன்னை அணுகிய எஃப்.பி.ஐ அதிகாரிக்கு ரகசிய ஆவணங்களை வழங்கிய அமெரிக்க விண்வெளித்துறை விஞ்ஞானிக்கு 13 ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. 54 வயதான ஸ்டீவார்ட் நொசெட்டேவுக்கு இத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது. அரசு விஞ்ஞானி என்ற நிலையில் நொசெட்டே நடத்திய அதி ரகசிய
செயல்களின் ஆவணங்களை இவர் மொஸாத் ஏஜண்டிடம் வழங்கியுள்ளார்.
உளவு, மோசடி, வரி ஏய்ப்பு ஆகிய குற்றங்கள் நொசெட்டே மீது சுமத்தப்பட்டுள்ளது. “உங்களுக்கு உதவுவதில் நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன்” என்று 2009 செப்டம்பர் மாதம் மேஃப்ளவர் ஹோட்டலில் வைத்து ஆவணங்களை ஒப்படைக்கும்போது நொசெட்டே கூறியுள்ளார்.
2009 ஜனவரி மாதம் ஏமாற்றுமோசடி மற்றும் வரி ஏய்ப்பையும் நொசெட்டே ஒப்புக்கொண்டுள்ளார். தவறான கணக்குகளை தாக்கல் செய்து 2,65,000 டாலர் வரி ஏய்ப்பு வரி ஏய்ப்பு செய்துள்ளார் நொசெட்டே.
மாசேசூட்ஸ் இன்ஸ்ட்யூட் ஆஃப் டெக்னாலஜியில் இருந்து பயிற்சி பெற்ற நொசெட்டே பெண்டகன், எரிசக்தி, நாஸா, வெள்ளைமாளிகை விண்வெளித்துறை குழு ஆகியவற்றில் பணியாற்றியுள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக