ஞாயிறு, மார்ச் 25, 2012

ஆபாச படம்:பா.ஜ.கவின் உண்மையான முகம் வெளியாகியுள்ளது – திக்விஜய்சிங்


குணா(மத்தியபிரதேசம):கர்நாடகம் மற்றும் குஜராத் சட்டப் பேரவையில் பாஜக உறுப்பினர்கள் ஆபாச படம் பார்த்துள்ளனர். இது பாஜக வின் உண்மையான முகத்தைக் காட்டுகிறது என்று காங்கிரஸ் பொதுச்செயலாளர் திக்விஜய்சிங் கூறியுள்ளார். மத்தியபிரதேச மாநிலம் ரஹோகரில் வெள்ளிக்கிழமை நடந்த நவராத்திரி விழாவில் கலந்துகொண்ட திக்விஜய்சிங் செய்தியாளர்களிடம் கூறியது:

கர்நாடகம் மற்றும் குஜராத் சட்டப் பேரவையில் பாஜக உறுப்பினர்கள் ஆபாச படம் பார்த்துள்ளனர். இது பாஜக வின் உண்மையான முகத்தைக் காட்டுகிறது. ஆனால் குஜராத் சட்டப் பேரவை உறுப்பினர்கள் ஆபாச படம் பார்க்கவில்லை என்று கூறியிருப்பது தனக்கு ஆச்சரியமளிக்கவில்லை.
மாநில அரசே விசாரணை நடத்தி அளித்த அறிக்கையில் இந்த முடிவு எதிர்பார்த்ததுதான். தடயவியில் அறிக்கை, மோடி அரசுக்குத்தான் சாதகமான பதிலை அளித்திருக்கும் என்றும் திக்விஜய்சிங் குற்றம் சாட்டினார். சர்ச்சைக்குரிய எம்.எல்.ஏ சங்கர்சவுதரியின் ஐபாடில்(டேப்லட்) ஆபாச படங்கள் ஒன்றும் இல்லை என்று தடவியல் அறிக்கை வெளியானது. இதனை குற்றம் சாட்டி திக்விஜய்சிங் கூறினார்.
கர்நாடகா மாநில சட்டப்பேரவையில் ஆபாச படங்களை பார்த்த 3 அமைச்சர்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்து விசாரணையை எதிர்கொள்ளும் வேளையில் குஜராத் சட்டப்பேரவையிலும் பா.ஜ.க எம்.எல்.ஏக்கள் இருவர் ஆபாசப்படம் பார்த்த செய்தி பரபரப்பை ஏற்படுத்தியது. ஆபாசப்படம் பார்த்த பா.ஜ.க எம்.எல்.ஏக்களை அவையில் இருந்து வெளியேற்ற காங்கிரஸ் கட்சி கோரியது. ஆனால், ஆபாசப்படம் பார்த்தவர்களை வெளியேற்றாமல் நடவடிக்கை எடுக்க கோரிய காங்கிரஸ் எம்.எல்.ஏக்களை அவையில் இருந்து வெளியேற்ற உத்தரவிட்டார் சபாநாயகர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக