சிரியாவின் பல பகுதிகளில் நடைபெற்ற வன்முறையில் பொதுமக்கள் உள்பட 62 பேர் உயிரிழந்தனர். சிரியாவின் மத்திய பகுதியான ஹமா, ஹோம்ஸ் மற்றும் இத்லிப்பில் நடைபெற்ற ராணுவ தாக்குதலில் 35 பொதுமக்கள் கொல்லப்பட்டதாக மனித உரிமை அமைப்பு தெரிவித்தது.
நாடு முழுவதும் நடைபெற்ற மோதலில் 18 ராணுவ வீரர்கள், 9 துணை ராணுவத்தினர் உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இத்லிப் மாகாணத்தில் மிக அதிகபட்சமாக 17 சிவிலியன்கள் உயிரிழந்துள்ளனர். இதில் பொதுமக்கள் பயணம் செய்த பஸ் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 10 பேர் கொல்லப்பட்டனர். துருக்கியின் எல்லைப் பகுதியில் இந்தத் தாக்குதல் நடைபெற்றது. ஹோம்ஸ் மாகாணத்தில் 12 பேர் கொல்லப்பட்டனர். ஹமாவில் 5 பேரும், டாராவில் ஒருவரும் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிரியாவில் கடந்த சில மாதங்களாக நடந்து வரும் தொடர் வன்முறையில் இதுவரை 9,100 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதிபர் பஷார் அல்-அசாத்துக்கு எதிராக தினசரி போராட்டம் பல்வேறு நகரங்களில் நடைபெறுகிறது. பொதுமக்களை அடக்க ராணுவத்தினர் முடுக்கி விடப்பட்டுள்ளனர். இருதரப்பினரிடையே நடைபெறும் மோதலில் தினசரி 10க்கும் அதிகமானோர் உயிரிழப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக