திருநெல்வேலி:கூடங்குளம் அணு உலைக்கு எதிரான போராட்டத்தின் போது, கைது செய்யப்பட்ட 178 பேர்களில் 138 பேருக்கு நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. அதேவேளையில், 40 பேரை ஜாமீனில் விடுவிக்க நீதிமன்றம் மறுத்துவிட்டது.
கூடங்குளம் அணு மின் நிலையத்தைத் திறக்க தமிழக அரசு அனுமதித்தவுடன், கடந்த வாரம் கூட்டப்புளி மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து, சாலையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 178 பேரை பழவூர் காவல்துறை கைது செய்தது.
திருநெல்வேலி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட 178 பேரும், பின்னர் திருச்சி சிறையில் அடைக்கப்பட்டனர். இதையடுத்து, கைதானவர்கள் அனைவரின் சார்பிலும் ஜாமீன் கோரி, நெல்லை முதலாவது செசன்ஸ் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுக்களை இன்று விசாரித்த நீதிமன்றம், கைது செய்யப்பட்ட 178 பேரில் 138 பேருக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். 40 பேர் மீது முந்தைய வழக்குகள் உள்ளதால் அவர்களுக்கு ஜாமீன் வழங்கவில்லை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக