சிரியாவில் அதிபர் பஷர் அல்-ஆசாத்துக்கு எதிராக போராட்டம் நடந்து வருகிறது. இதையடுத்து சுமார் 10 ஆயிரம் பேர் ராணுவத்தால் சுட்டு கொல்லப்பட்டுள்ளனர். எனவே போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர ஐ.நா. சபை மற்றும் ஐரோப்பிய யூனியன் நாடுகள், அரபு நாடுகளும் தீவிரமாக உள்ளன. ஆசாத் பதவி விலகும்படி வலியுறுத்தி வருகின்றனர். ஆனால் இதற்கு அவர் மறுத்து வருகிறார்.
இதை தொடர்ந்து இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, நெதர்லாந்து, ஸ்பெயின் ஆகிய 6 ஐரோப்பிய நாடுகள் சிரியாவுடன் ஆன தங்களது தூதரக உறவை முறித்துள்ளன.
இதை தொடர்ந்து ஐரோப்பிய யூனியன் நாடுகள் அடுத்த அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டுள்ளன. அதாவது, சிரியா அதிபர் ஆசாத்தின் மனைவி அஷ்மா மற்றும் அவரது குடும்பத்தினர் ஐரோப்பிய நாடுகளில் பயணம் செய்ய தடை விதித்துள்ளன. அதற்கு வசதியாக அந்த நாட்டு வங்கிகளில் உள்ள அவரது கணக்குகளை முடக்கி வைத்துள்ளனர்.
இது அஷ்மாவுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஏனெனில் அவர் இங்கிலாந்தில் பிறந்து வளர்ந்தவர். அங்கேயே கல்வி பயின்று பாங்கியிலும் பணிபுரிந்துள்ளார். நவநாகரீக மங்கையாக உலகை வலம் வரும் அவர் ஆசாத்தை திருமணம் செய்தபின் 3 குழந்தைகளுக்கு தாயாகி சிரியாவில் தங்கியுள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக