குவைத்தில் இடம்பற்ற பாராளுமன்ற தேர்தலில் இஸ்லாமிய அரசியல் கட்சியால் வழிநடத்தப்படும் எதிர்க்கட்சி வெற்றிபெற்றுள்ளது , கடந்த வருடம் டிசம்பரில் ஏற்பட்ட மக்கள் ஆர்பாட்டத்தை தொடர்ந்து அதன் பாராளுமன்றம் கலைக்கப்பட்டு தேர்தல் இடம்பெற்றது. இதில் ஆளும் தரப்பு தோல்வி கண்டுள்ளது மொத்தமாக 50 ஆசனங்களை கொண்ட பாராளுமன்றத்தில் 34 ஆசனங்களை இஸ்லாமிய அரசியல் கட்சியால் வழிநடத்தப்படும் எதிர்க்கட்சி கைப்பற்றியுள்ளது என்று ஆரம்பகட்ட தகவல்கள் தெரிவிக்கின்றது.
லிபரல் கட்சிகள் பெரும் பின்னடையை கண்டுள்ளது. குவைத் ஐந்து தேர்தல் மாவட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளது ஒவ்வொரு மாவட்டத்தில் இருந்தும் 10 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படும் தேர்தல் முறை அங்கு நடைமுறையில் இருக்கிறது.
குவைத்தில், கடந்த டிசம்பரில் ஏற்பட்ட மக்கள் ஆர்பாட்டம் எதிர்க்கட்சியினர் நடத்திய போராட்டம் ஆகியவற்றை தொடர்ந்து பிரதமர் ஷேக் நசீர் அல் முஹம்மத் அல் – சபாஹ் மீது ஊழல் புகார் தெரிவித்த எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள், பாராளுமன்றத்தை நடத்த விடாமல் முடக்கினர். அதை தொடர்ந்து குவைத் பிரதமரும் அமைச்சர்களும் பதவி விலகினர்.குவைத்தில் பிரதமர் உட்பட அமைச்சரவை பதவி விலகியதை அடுத்து, நாடாளுமன்றத்தை மன்னர் ஷேக் சபாஹ் அல் – அஹ்மத் கலைத்தார் . அதை தொடர்ந்து பொதுத் தேர்தல் நடத்த கடந்த 2 ஆம் திகதி முடிவாகியது என்பது குறிப்பிடத்தக்கது .குவைத் மன்னராட்சி நிலவும் நாடாகும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக