செவ்வாய், பிப்ரவரி 28, 2012

கெஜ்ரிவாலுக்கு திக் விஜய் சிங் கண்டனம் !

digvijay and kejriwalலக்னோ:பாராளுமன்ற உறுப்பினர்களை குறித்து அன்னா ஹஸாரே குழுவைச் சார்ந்த அரவிந்த் கெஜ்ரிவால் வெளியிட்ட கருத்துக்களுக்கு காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் திக்விஜய்சிங் கண்டனம் தெரிவித்துள்ளார். உ.பி மாநிலம் நொய்டாவில் ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய அன்னா ஹஸாரே குழுவைச் சார்ந்த கெஜ்ரிவால், நாட்டை
ஆளும் எம்.பிக்கள் பலரும் கொள்ளைக்காரர்களாகவும், பாலியல் பலாத்கார வழக்கில் சிக்கியவர்களாகவும் உள்ளனர் என்று கூறியிருந்தார்.
கெஜ்ரிவாலின் இத்தகைய பேச்சு குறித்து காங். பொதுச்செயலாளர் லக்னோவில் செய்தியாளர்களிடம் கூறியது:
கெஜ்ரிவால் எத்தகைய அமைப்பு முறையை விரும்புகிறார்? பாராளுமன்றமும், பாராளுமன்ற ஜனநாயகமும் மோசம் என்று கூறும் கெஜ்ரிவால் விரும்புவது ஒரே கட்சி ஆட்சி முறையா?, ஏகாதிபத்திய ஆட்சியா? என்பதை விளக்கவேண்டும். அரசின் உத்தரவுகளை கெஜ்ரிவால் எத்தனை முறை மீறியிருக்கிறார்? பா.ஜ.கவின் பாணியைத்தான் அன்னா ஹஸாரே குழுவினர் கடைப்பிடிக்கின்றனர். அவர்கள் ஒருபோதும் பா.ஜ.கவுக்கு எதிராக கருத்தை தெரிவிக்கமாட்டார்கள். காங்கிரஸ் கட்சியைத்தான் ஹாஸாரே குழுவினர் குறிவைத்துள்ளனர். இவ்வாறு திக்விஜய்சிங் கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக