பாகிஸ்தானில் ஆப்கானிஸ்தான் எல்லையில் வாழும் மக்களை தீவிரவாதிகள் என்று கூறி அமெரிக்கா ஆளில்லா விமானம் மூலம் தாக்குதல் நடத்தி வருகிறது எனவே, பொதுமக்கள் மத்தியில் அமெரிக்காவுக்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது. சமிபத்தில் நடந்த தாக்குதலில் குழந்தைகள் உட்பட 8 பேர் பலியானர்கள் . இது போன்ற தாக்குதல்கள் அப்பகுதயில் வாடிக்கை ஆகின்றன
கடந்த 8 மாதங்களுக்கு முன்பு நடத்திய ஏவுகணை தாக்குதலில் பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் 26 பேர் உயிர் இழந்தனர். இது அங்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. ஆகவே, ஆப்கானிஸ்தானில் முகாமிட்டிருக்கும் “நேட்டோ” படைகளுக்கு பாகிஸ்தான் வழியாக எரிபொருள் மற்றும் உணவுப் பொருட்கள் எடுத்துச்செல்ல அனுமதிக்கக்கூடாது என்றும் வலியுறுத்தப்பட்டு வருகிறது.
இதனை கண்டித்து அமெரிக்காவுக்கு எதிராக நேற்று தலைநகர் இஸ்லாமாபாத்தில் பிரமாண்டமான பேரணியை நடத்தினர். அதில் ,இஸ்லாமிய போராட்ட குழுவான லஷ்கர்-இ-தொய்பா, தெபா-இ-பாகிஸ்தான் கவுன்சில், அகல்-இ-சுனத் வால் ஜமால் உள்ளிட்ட
அமைப்புகளும்
பேரணியில் லஷ்கர்-இ- தொய்பா தலைவர் ஹபிஷ் முகமது சயீத், தெபா-இ- பாகிஸ்தான் கவுன்சில் தலைவர் மவுலானா முகமது அகமது லுதியான்ஷி, மவுலானா காலித் தில்லான், பாகிஸ்தான் உளவுத்துறையைச் சேர்ந்த முன்னாள் அதிகாரி ஹமித் குல் உள்ளிட்ட சுமார் 3,500 பேர் கலந்து கொண்டனர்.
“அமெரிக்கா ஒழிக”, “அமெரிக்காவே வெளியேறு”, “புனித போர் தொடரும்” என்பன போன்ற கோஷங்கள் எழுப்பப்பட்டன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக