புதன், பிப்ரவரி 22, 2012

மொகஞ்சதாரோவை சீரமைக்க ரூ.100 கோடி ஒதுக்கீடு செய்தது பாகிஸ்தான் !

Rs.100 crore sanctioned to Indus valley civilization
 பயணிகளை கவர்ந்திழுக்கும் வகையிலும் அங்கு மேம்பாட்டு பணிகளை மேற்கொள்ள ரூ.100 கோடியை ஒதுக்கியுள்ளது பாகிஸ்தான்.
 உலகின் மிகப் பழமையான நாகரிகத்தைக் கொண்ட மொகஞ்சதாரோ பகுதி, பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் உள்ளது. 12 லட்சத்து 60 ஆயிரம் கி.மீ. நிலப்பரப்பைக் கொண்டதாகும்.  கடந்த ஆண்டு ஏப்ரலில் பாகிஸ்தானில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டபோது சிந்து சமவெளியுடன் இணைக்கப்பட்டது மொகஞ்சதாரோ.

 அதைத்தொடர்ந்து அங்கு சீரமைப்புப் பணிகளை மேற்கொள்ள வாரியமும், தொழில்நுட்ப ஆலோசனைக் குழுவும் அமைக்கப்பட்டது.

 மொகஞ்சதாரோவுக்கான தேசிய நிதி செயல்வாரியம், மொகஞ்சதாரோவில் உள்ள ஓய்வு இல்லத்தை சீரமைக்கவும், நிலப்பரப்பையும் அளவிடவும் முடிவு செய்துள்ளது என்று சிந்து கலாசார செயலர் ஆசிஸ் உகய்லி தெரிவித்துள்ளார்.

 இதேபோல் அங்குள்ள வரலாற்றுச் சின்னங்கள் காணாமல் போனது தொடர்பான வழக்கை மீண்டும் கையிலெடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக