திங்கள், பிப்ரவரி 27, 2012

மின்வெட்டை கண்டித்து எஸ்.டி.பி.ஐ யினர் சென்னையில் ஆர்ப்பாட்டம்

 சென்னை: சோசியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆப் இந்தியாவின்   தென் சென்னை மாவட்டம் சார்பாக தமிழகம் முழுவதும் ஏற்படும் மின்வெட்டை கண்டித்து ஆர்பாட்டம் 16.02.12 அன்று மாலை 4 மணி அளவில் சைதாபேட்டை பனகல் மாளிகை அருகில்  மாவட்ட தலைவர்   முஹம்மது ஹுசைன் அவர்கள்  தலைமையில் நடைபெற்றது.   மாவட்ட  செயலாளர் அஹமது அலி அவர்கள் வரவேற்புரையாற்றினார். மாவட்ட பொருளாளர் அஹமது ரிபாய், மாவட்ட செயலாளர்கள் சாகுல் ஹமீது, அனீஸ் முஹம்மது மற்றும் தொகுதி தலைவர்கள் முன்னிலை வகித்தனர். மாவட்ட தலைவர்   முஹம்மது ஹுசைன் அவர்கள் தனது தலைமை உரையில் தமிழகம் முழுவதும் நடைபெறும் இந்த மின்வெட்டானது மத்திய மாநில அரசுகள் மனித குலத்திற்கு எதிரான கூடங்குளம் அணு மின் நிலையத்தை மனதில்  கொண்டு  செய்யப்படும் உள்நோக்கம் கொண்ட  ஒரு செயல் என்றும், தமிழ் மாநிலத்திற்கு தேவையான மின் பற்றாக்குறையை காற்றாலை, சூரிய மின் சக்தி போன்ற மாற்று திட்டங்கள் மூலம் சரி செய்ய வாய்ப்பு உள்ளது. ஆகவே தமிழக அரசு உடனடி நடவடிக்கை எடுத்து இந்த மின்வெட்டை உடனே நிறுத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
மாநில செயற்குழு உறுப்பினர் அண்ணாச்சி ரத்தினம் அவர்கள்   தனது கண்டன உரையில், மின் வெட்டை கூறியே பதவிக்கு வந்த அதிமுக அரசு, நாங்கள் ஆட்சிக்கு வந்தால் ஒரு சில மாதங்களில் மின் பற்றாக்குறையை சரி செய்வோம் என்று தனது தேர்தல் அறிக்கையில் கூறி இருந்தது. ஆனால் நடப்பது என்ன! அதற்கு மாற்றமாக 6 மணி  நேரம்  8  மணி நேரம் என்று கணக்கில்லாமல் தமிழகம் இருளில் மூழ்கும் அளவுக்கு மின்வெட்டை சந்தித்து வருகின்றது. திருப்பூர் போன்ற மாவட்டங்களில் பல தொழிற்சாலைகள் மூடப்பட்டு கிடக்கின்றன. இதனால் அடித்தட்டு மக்கள்தான் அதிக அளவில் பாதிக்கப்படுகின்றனர். எனவே மாற்று திட்டங்களை இனங்கண்டு துரித கதியில் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என தமிழக அரசைக் கேட்டுக்கொண்டார்.

தமிழக அரசை கண்டித்து கோசங்கள் எழுப்பப்பட்டன.  நூற்றுக்கணக்கான பொதுமக்களும் செயல்வீரர்களும் கலந்து கொண்டனர். மாவட்ட துணைத்தலைவர் முஹம்மது இஸ்மாயில் அவர்கள் தொகுத்து வழங்கினார். மாவட்ட பொது செயலாளர் முஹம்மது ஸாலிஹ் அவர்கள் நன்றி கூற ஆர்பாட்டம் நிறைவுற்றது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக