பஞ்ச்குலா(ஹரியானா):சம்ஜோதா எக்ஸ்பிரஸ் ரெயில் குண்டுவெடிப்பு தொடர்பாக அண்மையில் தேசிய புலனாய்வு ஏஜன்சி(என்.ஐ.ஏ) கைது செய்த ஆர்.எஸ்.எஸ் தீவிரவாதி கமால் சவுகானை தனக்கு தெரியாது என்று குண்டுவெடிப்பு வழக்கில் முன்னர் கைது செய்யப்பட்ட அஸிமானந்தா கூறியுள்ளார். என்.ஐ.ஏ சிறப்பு நீதிமன்றத்தில் நடந்த விசாரணையின் போது, ‘சவுகானை தெரியுமா?’ என்ற கேள்விக்கு பதிலளித்த அஸிமானந்தா, ‘எனக்கு இந்த வழக்கில் பங்கில்லை. சவுகானை எனக்கு தெரியாது’ என்று
பதிலளித்துள்ளார்.
சம்ஜோதா எக்ஸ்பிரஸ் ரெயில் குண்டுவெடிப்பு வழக்கில் அடுத்த விசாரணை மார்ச் 7-ஆம் தேதி ஒத்திவைக்கப்பட்டுள்ளது என்று என்.ஐ.ஏ வழக்கறிஞர் ஆர்.கே.ஹாண்டா செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
2007 சம்ஜோதா எக்ஸ்பிரஸ் குண்டுவெடிப்பில் 68 பேர் கொல்லப்பட்டனர். இந்த நாசவேலையில் குண்டை வைத்தது தான் என்று கமால் வாக்குமூலம் அளித்திருந்தான். உ.பி மாநிலம் நொய்டாவில் வைத்து என்.ஐ.ஏ கைது செய்த சவுகான் பிப்ரவரி 14-ஆம் தேதி வாக்குமூலம் அளித்தான்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக