திங்கள், பிப்ரவரி 27, 2012

ஷரியா-ஹிந்த் பேரணி மற்றும் இணையதளத்தை தடைச்செய்ய ப.சிதம்பரத்திற்கு கோரிக்கை

e2bf3b11df0b872112757f1c2fee6e32_Lபுதுடெல்லி:தலைநகர் டெல்லியில் வருகிற மார்ச் 3-ஆம் தேதி நடக்க விருக்கும் ஷரியா-ஹிந்த் அமைப்பின் பேரணியையும் அதற்கு அழைப்பு விடுத்துள்ள இணையதளத்தையும் உடனடியாக தடைச்செய்ய வேண்டும் மேலும் அதற்கு கொடுக்கப்பட்ட அனுமதியையும் ரத்துச் செய்யவேண்டும் என்றும் தேசிய ஒருங்கிணைந்த குழுவின்
உறுப்பினர் நவைத் ஹமீத் (இவர் சிறுபான்மையினருக்கான தெற்கு ஆசிய சபையின் செயலாளராகவும் உள்ளார்) உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்திற்கு எழுதிய கடிதத்தில் கூறியுள்ளார்.
அந்த இணையதளத்தின் முகவரி ‘www.Shariah4Hind.com‘ என்றும், அதன் தலைவர் அபு-பராவுக்கும், அன்ஜெம் சௌத்ரிவுக்கும் வழங்கிய விசாவை திருப்ப பெறவேண்டும், அவர்கள் இந்தியாவுக்கு நுழைவதை முற்றிலும் தடை செய்ய வேண்டும் என்றும் தான் எழுதிய கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
இது மட்டுமின்றி அந்த இணையதளத்தை பதியப்பட்ட புகைப்படங்கள் அனைத்தும் அதிக ஆபத்து ஏற்படுத்தும் அளவிற்கு கோபம் மூட்டும் அளவில் உள்ளது. ஆகையால் உடனடியாக அது குறித்து விசாரணைச் செய்யவேண்டும். இன்னும் அதில் இந்திய முஸ்லிம் மக்களை ஒருங்கிணைத்து, இந்திய அரசியல் சட்டத்தை முற்றிலும் புறக்கணித்து, இந்தியாவில் ஷரியத் சட்டத்தை நிறுவ வேண்டும். என்று குறிப்பிட்டுள்ளதாக தனது கடிதத்தில் எழுதியுள்ளார்.
அடுத்தபடியாக அந்த பேரணியில் இந்திய அரசியலுக்கும், பிரதமர் மன்மோகன்சிங், காங்கிரஸ் கட்சியின் ராகுல்காந்தி, எல்.கே.அத்வானி மற்றும் நரேந்திர மோடிக்கும் எதிராக பத்வா கொடுக்க திட்டமிட்டுள்ளதாகவும், வீடியோ கான்பரசிங் மூலம் ஷேக் ஓமர் பக்ரி முஹம்மது (அல்-முஹஜிரௌன் என்ற அமைப்பின் தலைவர் – பிரிட்டனில் பகிரங்கமாக ஜிஹாதையும், ஷரியத் ஆட்சி முறையை அமல்படுத்த வேண்டும் என்று கூறியதற்காக அங்கிருந்து வெளியேற்றப்பட்டவர்), அபு பரா (இணையதளத்தின் தலைவர்), அன்ஜெம் சௌத்ரி ஆகியோரும் உரையாற்றுவார்கள் என்று வெளியிட்டுள்ளார்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அவர் தெரிவிக்கையில்;
பேரணி நடத்துவதற்கும், வெளிப்படையாக இந்திய அரசியல் சட்டத்திற்கு எதிராக சவால் விடும் அமைப்பிற்கும் டெல்லி காவல் அதிகாரிகள் எவ்வாறு அனுமதி கொடுத்தனர்?
பிரிட்டனில் உள்ள இந்திய தூதரகம், அவர்களின் பின்னணி நிலவரத்தை தெரிந்துகொள்ளாமல், இந்தியாவிற்குள் நுழைய எவ்வாறு அனுமதி கொடுத்தது? என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்த இணையதளத்தின் நடவடிக்கைகளை பார்க்கும் போது பகத்சிங் க்ராந்தி சேனா என்ற அமைப்பை சார்ந்த நபர்களுடன் தொடர்பு உடையது போல் உள்ளது. இதன் தலைவர் தஜிந்தர் பல் சிங்க் பக்க்ஹா, வழக்குரைஞர் பிரஷாந்த பூஷன் அவர்களை தாக்கியதற்கு கைது செய்யப்பட்டுள்ளார். இதன் மற்றும் சில உறுப்பினர்கள் புது டெல்லியில் இரண்டு மாதத்திற்கு முன்பு பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா நடத்திய பேரணியில் கலந்து கொள்ள வந்தவர்களை டெல்லி இரயில் நிலையத்தில் வைத்து தாக்கியதற்காக கைது செய்யப்பட்டுள்ளனர். என்றும் தெரிவித்துள்ளார்.
இத்தகையவர்களுக்கு பேரணி நடத்த அனுமதி அளித்திருப்பது தனக்கு வியப்பூட்டுவதாகம், இந்த பேரணி நடத்துவதன் மூலம் இந்திய சமூகங்கள் இடையே பகைமை, குழப்பம் மற்றும் குரோதங்களை வளர்த்து அவர்கள் தங்கள் இலக்கில் வெற்றி பெற நினைப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக