கர்நாடக முன்னாள் முதல்-மந்திரி எடியூரப்பா சட்டவிரோத சுரங்க ஊழல், நிலமோசடி என அடுக்கடுக்கான ஊழல் புகார்களில் சிக்கிக் கொண்டு உள்ளார்.
லோக் ஆயுக்தா கோர்ட்டிலும், போலீசிலும் அவர் மீது புகார்கள் குவிந்த வண்ணம் உள்ளது. தற்போது புதியதாக வீட்டு மனை ஒதுக்கீடு மோசடி புகார் எழுந்துள்ளது.
பெங்களூரைச் சேர்ந்த வக்கீல் பி.வினோத் என்பவர் எடியூரப்பா அவரது மகள் அருணாதேவி
உள்பட 8 பேர் மீது இந்த மோசடி புகார் கொடுத்துள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-லோக் ஆயுக்தா கோர்ட்டிலும், போலீசிலும் அவர் மீது புகார்கள் குவிந்த வண்ணம் உள்ளது. தற்போது புதியதாக வீட்டு மனை ஒதுக்கீடு மோசடி புகார் எழுந்துள்ளது.
பெங்களூரைச் சேர்ந்த வக்கீல் பி.வினோத் என்பவர் எடியூரப்பா அவரது மகள் அருணாதேவி
2007-ல் எடியூரப்பா துணை முதல்-மந்திரியாக இருந்தபோது பெங்களூர் புறநகர் பகுதியில் ஜி கேட்டகரியில் வீட்டு வசதி வாரிய வீடுகள் சிவசங்கர், கிருஷ்ணா, சந்தேஷ் கவுடா, மஞ்சுநாத் ஆகியோருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டது.
ஒவ்வொரு வீடும் 30+50 சதுர அடி கொண்டது. வீடு ஒதுக்கீடு செய்யுமாறு கர்நாடக வீட்டு வசதி ஆணையர் தயாபெரிக்கு எடியூரப்பா சிபாரிசு கடிதம் கொடுத்துள்ளார். இதில் ஒதுக்கீடு பெற்றுள்ள மஞ்சுநாத் எடியூரப்பாவின் மகள் சுகுணா தேவி நடத்தும் கல்வி நிறுவனத்தில் பணிபுரிகிறார்.
மஞ்சுநாத்துக்கு ஒதுக்கப்பட்ட வீட்டை 2010 மார்ச் 31-ந்தேதி அருணா தேவிக்கு பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதேபோல் மற்ற 4 மனைகளும் அருணாதேவிக்கு பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதுபற்றி விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறிள்ளார்.
இதையடுத்து எடியூரப்பா அவரது மகள் அருணாதேவி மற்றும் வீடு ஒதுக்கீடு பெற்ற பினாமிகள் சிவசங்கர், கிருஷ்ணா, சந்தேஷ் கவுடா, மஞ்சுநாத் உள்பட 8 பேர் மீது லோக் ஆயுக்தா போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். 4 பேருக்கும் பத்திரிகையாளர்கள் என்ற முறையில் வீடு ஒதுக்கீடு செய்யப்பட்டது.
போலீஸ் விசாரணையில் யாருமே பத்திரிகையாளர்கள் கிடையாது என தெரிய வந்தது. லோக்ஆயுக்தா போலீசார் முழு விசாரணை நடத்தி வருகிற 14-ந்தேதி மாவட்ட கோர்ட்டில் அறிக்கை தாக்கல் செய்ய முடிவு செய்துள்ளனர். இதனால் எடியூரப்பாவுக்கு மேலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக