புதுடெல்லி:ராணுவ தலைமை தளபதி வி.கே.சிங் இஸ்ரேல் செல்ல மத்திய பாதுகாப்பு அமைச்சகம் அனுமதி மறுத்துள்ளது. மார்ச் 16-ஆம் தேதி முதல் 18-ஆம் தேதி வரை இஸ்ரேலுக்கு சுற்றுப்பயணம் செய்ய வி.கே.சிங் திட்டமிட்டிருந்தார் மேற்காசியாவில் நெருக்கடியான சூழல்கள் நிலவுவதை தொடர்ந்து வி.கே.சிங்கிற்கு அனுமதி மறுத்துள்ளதாக பாதுகாப்பு அமைச்சகம்
கூறுகிறது. ஆனால் பிறந்த தேதி சர்ச்சை தொடர்பாக மத்திய அரசுடன் மோதியதால் வி.கே.சிங்கிற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இவ்விவகாரத்தில் மத்திய அரசை நீதிமன்றத்திற்கு அழைத்த முதல் ராணுவ தளபதி வி.கே.சிங் ஆவார்.
பிறந்த தேதி விவகாரத்தில் உச்சநீதிமன்றம் மத்திய அரசுக்கு ஆதரவாக தீர்ப்பளித்தது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக