வியாழன், ஜூன் 18, 2015

துருக்கி முன்னாள் அதிபர் சுலேமான் டெமிரெல் மரணம்

துருக்கி நாட்டின் முன்னாள் அதிபர் சுலேமான் டெமிரெல்(90)  மரணம் அடைந்தார்.

தனது 40-வது வயதில் அரசியலுக்குள் நுழைந்த இவர் துருக்கி நீதி கட்சியின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். சுமார் 50 ஆண்டு காலமாக துருக்கி நாட்டு அரசியலோடு ஒன்றி இணைந்திருந்த சுலேமான் டெமிரெல், 1960 மற்றும் 1970-களில் அந்நாட்டு பிரதமராக பதவி வகித்தார். 

பின்னர் சில ஆண்டுகளுக்கு அரசியல் தடை விதிக்கப்பட்ட நிலையில் அந்த தடையை உடைத்தெறிந்து 1993ஆம் ஆண்டு அதிபர் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

2000-ம் ஆண்டுவரை துருக்கியின் அதிபராக பதவி வகித்த இவரது ஆட்சிக் காலத்தில் அந்நாட்டின் சமூகப் பொருளாதார வளர்ச்சி உயர்நிலையை அடைந்ததாக கருதப்படுகின்றது. 

சுவாசக்குழாய் பாதிப்பிற்காக தலைநகர் அன்காராவில் உள்ள குவென் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த சுலேமான் டெமிரெல்  அதிகாலை 2.05 மணியளவில் மாரடைப்பால் மரணம் அடைந்ததாக துருக்கி ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக