பெரியகுளம் அருகே உள்ள கைலாசநாதன் கோவிலில் பூசாரியாக பணிபுரிந்துவந்தார் தாழ்த்தப் பட்ட இளைஞர் நாகமுத்து.
இந்நிலையில் கடந்த 3 வருடங்களுக்கு முன்பு, இந்த கோவிலை ஓ.பன்னீர்செல்வம் தம்பி ராஜாவும் அவரது குடும்பத்தினரும் தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர். அப்போது நாகமுத்துவை இனிமேல் கோவிலுக்கு வரக்கூடாது என்றும், சாதி பெயரைச்சொல்லி திட்டியும் மிரட்டியும் வந்தனர். இதையடுத்து நாகமுத்து பலமுறை போலீசாருக்கு புகார் கொடுத்தும் கூட, காவல்துறை நடவடிக்கை எடுக்கவில்லை. இந்த விசயம் ராஜா மற்றும் அவரது ஆதரவாளர்களுக்கு தெரியவரவே, நாகமுத்து மற்றும் அவரது குடும்பத்தினரை தொடர்ந்து மிரட்ட ஆரம்பித்தனர். இதனால் மனம் உடைந்த
நாகமுத்து, கடந்த 2012ல் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். அப்போது நாகமுத்துவின் சட்டைப்பையில் ஒரு கடிதம் இருந்தது தெரியவந்தது. பெரியகுளம் சேர்மனும், ஓ.பன்னீசெல்வத்தின்
தம்பியுமான ராஜா, வி.எம்.பாண்டி, மணிமாறன் என்று தற்கொலைக்கு காரணமானவர்கள் 7 பேர் என்று எழுதிவைத்திருந்தார். இதைக்கண்டு தலித் மக்கள் கொதித்தெழுந்து மறியல் - போராட்டங்களில் ஈடுபட்டனர். இதனால், ராஜா உள்ளிட்ட 7 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. அதன் அடைப்படையில் போராட்டத்தை கைவிட்டு, நாகமுத்துவின் உடலை அடக்கம் செய்தனர். கடந்த மூன்று ஆண்டுகள் ஆகியும் தற்கொலைக்கு தூண்டிய ராஜா உட்பட 7 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யாமல்
இருந்தனர். இதனால் பாதிக்கப்பட்ட நாகமுத்துவுக்கு ஆதரவாக சமூக சேவகர் எவிடன்ஸ் கதிர், மதுரை ஐகோர்ட்டில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ராஜாவின் அண்ணன் அதிகார பலத்தில் இருப்பதால் நாகமுத்துவின் சாவிற்கு நீதி கிடக்காது என்றுகூறி, இந்த வழக்கை சிபிஐக்கு மாற்றி குற்றப்பத்திகையை தாக்கல் செய்யவேண்டும் என்று
வலியுறுத்தினர். அதன் அடிப்படையில் ஜூன் 5ம் தேதிக்குள் குற்றப்பத்திரீகையை தாக்கல் செய்ய வேண்டும் என பெரியகுளம் டிஎஸ்பி உமா மகேஷ்வரன் உத்தரவிட்டனர். அதன் அடிப்படையில் இன்று பெரியகுளம் ஜே.எம்.2 கோர்ட்டில் டிஎஸ்பி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தார். ஏற்கனவே ராஜாமேல் இருந்த 306 வழக்கு, மேலும் 109 மற்றும் வன்கொடுமை சட்டத்தின் கீழ் ராஜா ஏஒன் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக