சனி, ஜூன் 27, 2015

கே.எப்.சி. உணவுகளில் கேடுவிளைவிக்கும் பாக்டீரியா இருப்பதாக பரிசோதனையில் அதிர்ச்சி தகவல்

தாங்கள் மேற்கொண்ட சோதனையில் கே.எப்.சி. உணவுகளில் கேடுவிளைவிக்கும் பாக்டீரியா இருப்பதாக குற்றம்சாட்டியுள்ளது ஆந்திராவை சேர்ந்த அரசு சாரா நிறுவனம்.

தெலுங்கானா மாநில அரசுக்கு சொந்தமான ஆய்வகத்தில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் கே.எப்.சி. உணவுகளில் கேடுவிளைவிக்கும் பாக்டீரியாக்கள் இருப்பது கண்டறியப்படுள்ளது என ஆந்திரப் பிரதேசத்தை சேர்ந்த குழந்தை உரிமைகள் அமைப்பின் தலைவர் அனுராதா ராவ் தெரிவித்துள்ளார். 

மேலும் கே.எப்.சி.  எதிராக நடவடிக்கை எடுக்கும் படி மாநில அரசுகளுக்கு உத்தரவிடக்கோரி லோக் ஆயுக்தா அமைப்பை நாடியிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். ஆனால் கே.எப்.சி. நிர்வாகம் இந்த குற்றசாட்டை மறுத்துள்ளது. மேலும் தங்கள் நிறுவனத்த்கிற்கு கேட்ட பெயரை ஏற்படுத்தியதற்காக சம்மந்தப்பட்டவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக