சனி, ஜூன் 27, 2015

ஹாக்கி உலக லீக் அரையிறுதி: இந்தியா- பாகிஸ்தான் ஆட்டம் 2-2 என டிராவில் முடிந்தது

ஹாக்கி உலக லீக் அரையிறுதிப் போட்டி பெல்ஜியத்தில் உள்ள அந்த்வெர்ப் நகரில் நடைபெற்று வருகிறது. ஏ பிரிவில் இடம்பெற்றுள்ள இந்திய அணி  பாகிஸ்தானை எதிர்கொண்டது. இப்போட்டி 2-2 என சமநிலையில் முடிந்து. இதன்மூலம் இந்தியா ஏ பிரிவில் 7 புள்ளிளுடன் முதல் இடத்தில் உள்ளது.

போட்டியின் துவக்கத்தில் இந்திய அணி ஆதிக்கம் செலுத்தியது. 13-வது நிமிடத்தில் இந்திய வீரர் ராமன்தீப் சிங் முதல் கோலை பதிவு செய்தார். 23-வது நிமிடத்தில் பாகிஸ்தான் அதற்கு பதில் கோல் அடித்து சமன் செய்தது. அந்த அணியின் முகமது இர்பான் அந்த போலை அடித்தார். அடுத்த 7-வது நிமிடத்தில் முகமது இம்ரான் மேலும் ஒரு கோல் அடிக்க, பாகிஸ்தான் 2-1 என முன்னிலை பெற்றது. 

அடுத்த 2-வது நிமிடத்தில் இந்தியாவின் ராமன்தீப் சிங் பதில் கோல் அடித்தார். அதன்பின்னர் ஆட்ட நேரம் முடியும் வரை இருதரப்பிலும் கோல்கள் அடிக்காததால் இந்த போட்டி 2-2 என டிராவில் முடிந்தது. இந்தியாவின் சத்பிர் சிங், தேவிந்தர் வால்மீகி ஆகியோர் மஞ்சள் அட்டை பெற்றனர்.

இந்திய அணி முதல் போட்டியில் பிரான்சை 3-2 என்ற கோல் கணக்கிலும், 2-வது போட்டியில் போலந்தை 3-0 என்ற கோல் கணக்கிலும் வீழ்த்தியிருந்தது. நாளை  ஆஸ்திரேலியாவைச் சந்திக்கிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக