நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் கிங் ஃபிஷர் விமானச் சேவை நிறுவனத்துக்கு நிதியுதவி வழங்க முடியாது என்று அரசு திட்டவட்டமாகத் தெரிவித்துவிட்டது. இது தொடர்பாக தில்லியில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் அஜித் சிங், "நிதியுதவி வழங்கும் திட்டம் அரசிடம் இல்லை. தனியார் நிறுவனத்துக்காக வங்கிகளிடம் கடன் கேட்க அரசால் முடியாது' என்றார். இதனிடையே, கிங்ஃபிஷர் நிறுவனத்திலிருந்து 34 விமானிகள் பணியிலிருந்து விலகினர். இதனால், பணியிலிருந்து விலகிய விமானிகளின் எண்ணிக்கை 80 ஆக உயர்ந்திருக்கிறது.
நிறுவனத்தில் பணியாற்றிவரும் பெரும் எண்ணிக்கையிலான பிற ஊழியர்களும் பணியிலிருந்து விலகுவது தொடர்பாக நிர்வாகத்துக்கு நோட்டீஸ் அளித்திருப்பதாகவும் கூறப்படுகிறது.
எனினும் இது தொடர்பாக கிங்ஃபிஷர் தரப்பிலிருந்து அதிகாரப்பூர்வமாக எந்தத் தகவலும் தெரிவிக்கப்படவில்லை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக