புதன், பிப்ரவரி 22, 2012

ஈரானில் மீண்டும் அதிரடி கூகுள்,யாஹூ போன்ற இணயதளங்களுக்கு தடை !

பார்லிமென்ட் தேர்தல் விரைவில் நடக்கவுள்ள நிலையில், வெப்சைட்களை மக்கள் பார்க்க ஈரானில் திடீர் தடை விதிக்கப்பட்டுள்ளது. கூகுள், யாஹூ உள்ளிட்ட வெப்சைட்கள் தடை செய்யப்பட்டுள்ளன. ஈரானில் 2009-ம் ஆண்டு அதிபர் தேர்தல் நடந்தது. 2-வது முறையாக முகமது அகமதிநிஜாத் வெற்றி பெற்று அதிபரானார்.
 4 ஆண்டு பதவிக்காலம் முடிவதை அடுத்து, அங்கு அதிபர் தேர்தல்
விரைவில் நடக்கவுள்ளது. இதற்கிடையில், நாட்டில் புரட்சி வெடித்து குடியரசு நாடாக
மாறியதன் 33-வது ஆண்டு விழா வரும் ஏப்ரல் 1-ம் தேதி கொண்டாடப்படுகிறது.

இதை விமரிசையாக கொண்டாட மக்கள் தயாராகி வரும் நிலையில், அதிரடி நடவடிக்கையாக வெப்சைட்களுக்கு திடீர் தடை விதிக்கப்பட்டுள்ளது. எச்டிடிபிஎஸ் என தொடங்கும் எல்லா வெப்சைட்களும் தடை செய்யப்பட்டுள்ளன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக