தைவானின் தென் பகுதியில் நேற்று கடும் நில நடுக்கம் ஏற்பட்டது இதனால் வீடுகள் மற்றும் கட்டிடங்கள் குலுங்கின. இதை தொடர்ந்த பீதி அடைந்த மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி ரோடுகளில் தஞ்சம் புகுந்தனர். இதற்கிடையே 6.1 ரிக்டர் அளவில் நில நடுக்கம் பதிவானதாக அறிவிக் கப்பட்டது. பிங்டங் மாகா ணத்தில் வுடாய் டவுன்ஷிப் பகுதியை மையமாக கொண்டு கடலுக்கு அடியில் 20 கி.மீட்டர் ஆழத்தில் இது உருவானது. இந்த நில நடுக்கம் காரணமாக பஸ் மற்றும் ரெயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 110 ரெயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன. இதனால் அவற்றில் பயணம் செய்த 60 ஆயிரம் பயணிகள் எந்தவித பாதிப்பும் இன்றி தப்பினர்.
நில நடுக்கம் காரணமாக ஏற்பட்ட சேத விவரம் மற்றும் உயிர் சேதம் குறித்த தகவல்கள் எதுவும் வெளியிடப்படவில்லை. கடந்த 2010-ம் ஆண்டு 6.4 ரிக்டர் அளவில் நில நடுக்கம் ஏற்பட்டது. அதன் பிறகு 2 ஆண்டு கழித்து மீண்டும் இங்கு கடும் நில நடுக்கம் ஏற்பட்டதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக