புதன், பிப்ரவரி 22, 2012

சிறுவனை கொன்ற வழக்கு:வாலிபர் மரண தண்டனை ஆயுள் தண்டனையாக குறைப்பு; கருணை மனுவை ஏற்று ஜனாதிபதி நடவடிக்கை !

ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்தவர் சுஷில்முர்மு. இவர் பக்கத்து வீட்டு சிறுவனை கொலை செய்தார். கீழ்க்கோர்ட்டில் இவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. அப்பீல்களிலும் இந்த தண்டனை உறுதிப்படுத்தப்பட்டது. சுப்ரீம் கோர்ட்டில் இவர் தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
மரண தண்டனை உறுதி செய்யப்பட்ட நிலையில் கடந்த 2004-ல் ஜனாதிபதிக்கு சுஷில் கருணை மனு அனுப்பினார்.ஜனாதிபதிக்கு வந்த கருணை மனுக்கள், கொஞ்சம், கொஞ்சமாக பைசல் செய்யப்பட்டு வருகின்றன.
 
கடந்த முறை பரிசீலனைக்கு வந்த கருணை மனுக்களில் சுஷிலின் மனுவும் அடங்கி இருந்தது. அந்த மனுக்களை பரிசீலித்த ஜனாதிபதி பிரதீபா பாட்டீல் சில மனுக்களை நிராகரித்தார். சுஷிலின் கருணை மனுவை ஏற்று, அவரின் மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்து உத்தரவிட்டார்.
 
இந்த விவரம் தகவல் அறியும் உரிமை ஆர்வலரான சுபாஷ்அகர்வால், தாக்கல் செய்த மனுவுக்கு ஜனாதிபதி மாளிகை அளித்துள்ள பதில் மூலம் தெரியவந்துள்ளது.
 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக