பழங்காலத்தில் எகிப்தில் உள்ள பிரமிடுகளில் இறந்தவர்களின் உடல்கள் பதப்படுத்தப்பட்டு வைக்கப்பட்டு இருந்தன. அவற்றை மம்மி என அழைக்கின்றனர். தற்போது அவை மருத்துவம் படிக்கும் மாணவர்களுக்கு பயனுள்ளதாக உள்ளது. இந்த நிலையில் இத்தாலியில் 200 ஆண்டுகளாக பதப்படுத்தி பத்திரமாக வைத்து இருந்த 5 மம்மிக்களை தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். அவற்றை பாதரசம், கடுமையான விஷம் அல்லது ரசாயன கலவையில் ஊறவைத்து பாதுகாத்து இருக்கலாம் என கருதப்படுகிறது. இவை 19-ம் நூற்றாண்டை சேர்ந்தது. இந்த மம்மிக்களின் உடல் பகுதி மிகவும் தடிமனாக உள்ளது. இது குறித்து தீவிர ஆராய்ச்சி நடைபெற்று வருகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக