செவ்வாய், பிப்ரவரி 28, 2012

ரஷ்ய பிரதமர் புடினுக்கு எதிராக 34 ஆயிரம் பேர் மனித சங்கிலி போராட்டம் !

 ரஷ்ய பிரதமர் விளாடிமிர் புடின். அதிபராக 2 முறை இருந்தவர். தொடர்ச்சியாக ஒருவரே 3-வது முறை அதிபராக முடியாது என்பதால், பிரதமர் தேர்தலில் போட்டியிட்டு வென்றார். மார்ச்சில் நடக்கவுள்ள அதிபர் தேர்தலில் மீண்டும் போட்டியிடுவதாக அறிவித்துள்ளார். மக்கள் நலனுக்கு எதிராக புடின் செயல்படுவதாக கூறி தலைநகர் மாஸ்கோவில் நேற்று 34 ஆயிரத்துக்கும் அதிகமானோர் திரண்டு மனித சங்கிலி போராட்டம் நடத்தினர். 

எதிர்ப்பை அமைதியான வழியில் வெளிப்படுத்தும் விதமாக வெள்ளை நிற ரிப்பன் அணிந்திருந்தனர். இந்த ஆர்ப்பாட்டத்தை நீர்த்துப்போகச் செய்யும் விதமாக புடின் ஆதரவாளர்கள் போட்டி மனித சங்கிலி நடத்தினர். ‘புடின் மனிதநேயர்’ என்று விளக்கி அவர்கள் சிவப்பு வண்ண இதய உருவம் அணிந்து பங்கேற்றனர். புடின் எதிர்ப்பு போராட்டத்துக்கே ஆதரவு அதிகம் காணப்பட்டது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக