வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் நேபாள அமைச்சருக்கு ஒன்றரை ஆண்டு சிறை தண்டனை விதித்து அந்நாட்டு சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு கூறியுள்ளது. நேபாள பிரதமர் பாபுராம் பட்டாராய் தலைமையிலான அரசில் தகவல், தொலைதொடர்பு துறை அமைச்சராக இருந்தவர் ஜெயபிரகாஷ் குப்தா.
இவர் தனது பதவியை தவறாக பயன்படுத்தி வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்ததாக சிறப்பு கோர்ட்டில் நேபாள ஊழல் கண்காணிப்பு ஆணையம் 2003-ம் ஆண்டு வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கில் குப்தாவுக்கு ஆதரவாக சிறப்பு கோர்ட் 2007-ல் தீர்ப்பு கூறியது. இந்த தீர்ப்பை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் ஆணையம் அப்பீல் செய்தது. இதில் நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது.
வருமானத்துக்கு எந்த வழியும் இல்லாமல் குப்தா ரூ.52.5 லட்சம் சொத்து குவித்துள்ளார் என்று கூறிய நீதிபதிகள், அவருக்கு ஒன்றரை ஆண்டு சிறை தண்டனை மற்றும் ரூ.52.5 லட்சம் அபராதம் விதித்து தீர்ப்பு கூறினர். இதையடுத்து குப்தா கோர்ட்டில் சரணடைந்தார். குற்றம் நிரூபிக்கப்பட்டதால், அமைச்சர் மற்றும் எம்.பி. பதவியை தானாகவே குப்தா இழப்பதாக கோர்ட் செய்தி தொடர்பாளர் ஹேமந்தா ராவல் கூறினார்.
அமைச்சர் பதவியில் இருக்கும்போது ஒருவருக்கு சிறை தண்டனை வழங்குவது நேபாள வரலாற்றில் இது முதல் முறை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக