செவ்வாய், பிப்ரவரி 21, 2012

சீனாவுடன் மோதலில் ஈடுபட அமெரிக்கா விரும்பவில்லை !

No collash with China said Pentagon higher officer.சீனாவுடன் எவ்வித ஆயுதப் போட்டியிலோ அல்லது மோதலிலோ ஈடுபட அமெரிக்கா விரும்பவில்லை என, அந்நாட்டின் ராணுவத் தலைமையகமான பென்டகன் அறிவித்துள்ளது.ஆசிய பசிபிக் மண்டலத்தில், அமெரிக்கா தனது படைகளைக் குவிப்பதில் கவனம் செலுத்தி வருகிறது. அப்பகுதி நாடுகளின் விருப்பத்திற்கேற்ப இந்நடவடிக்கைகளை மேற்கொள்வதாக சமாதானமும் கூறி
வருகிறது.ஆசியாவில் வல்லரசாக உருவாகி வரும் சீனாவுக்கு, இந்நடவடிக்கைகள் எரிச்சலையும், கோபத்தையும் கிளப்பியுள்ளன. 
இந்நிலையில், பென்டகன் உயரதிகாரி மார்டின் டெம்ப்சி இதுகுறித்து நேற்று கூறியதாவது:சீனாவுடன், அமெரிக்கா தனது உறவுகளை மேம்படுத்திக் கொள்ள இன்னும் நிறைய வாய்ப்புகள் உள்ளன. இந்த உறவுகளின் விளைவு, சீனாவுடன் ஆயுதப் போட்டியாகவோ அல்லது வேறு வகையிலோ மோதுவதாக இருக்காது.அதேநேரம் பசிபிக் மண்டலத்தில், அமெரிக்கா தனது வலிமையைத் தக்க வைத்துக் கொள்ளும். அங்கிருந்து விலக அமெரிக்கா எப்போதும் விரும்பாது.இவ்வாறு டெம்ப்சி தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக