தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறும் வகையில், காங்., பொதுச் செயலர் ராகுல் பிரசாரம் செய்துள்ளார். அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது' என, கான்பூர் மாவட்ட கலெக்டர் கூறினார். உ.பி., கான்பூர் மாவட்ட கலெக்டர் ஹரி ஓம் கூறியதாவது:சிவராத்திரி தினம் என்பதால், இன்று (நேற்று) தேர்தல் பிரசாரத்துக்கு சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. காங்கிரஸ் பொதுச்
செயலர் ராகுல் சார்பில், பிரசாரம் செய்வதற்கு அனுமதி கேட்கப்பட்டது. சிவராத்திரி தினம் என்பதால், மதியம் வரை தான் பிரசாரம் செய்ய வேண்டும் என்றும், 20 கி.மீ., தூரம் வரை மட்டுமே, சாலை வழி பிரசாரம் மேற்கொள்ள வேண்டும் என்றும், அவருக்கு அறிவுறுத்தப்பட்டது. ஆனால், அனுமதிக்கப்பட்ட நேரத்தை மீறி, பிற்பகல் 3 மணி வரை, பிரசாரத்தில் ஈடுபட்டார். மேலும், அனுமதிக்கப்பட்ட 20 கி.மீ., தூரத்துக்கு பதிலாக, 38 கி.மீ., வரை, சாலை வழி பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார். இது, தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறிய செயல். எனவே, அவர் மீது, எப்.ஐ.ஆர்., பதிவு செய்துள்ளோம். ராகுல் பிரசாரம் முழுவதும் வீடியோ எடுக்கப்பட்டுள்ளது.இவ்வாறு ஹரி ஓம் கூறினார்.
மறுப்பு:
உ.பி., மாநில காங்., தலைவர் ரீட்டா பகுகுணா கூறுகையில்,"ராகுல் தேர்தல் பிரசாரத்தில் எந்தவித விதிமுறை மீறலும் நடக்கவில்லை. மாயாவதி அரசுக்கு ஆதரவாக செயல்படும், கான்பூர் மாவட்ட நிர்வாகம், ராகுலின் பிரசாரத்துக்கு வரும் கூட்டத்தை தடுப்பதற்காக, இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டுள்ளது' என்றார்.

கான்பூர் தொகுதி எம்.பி.,யும், மத்திய அமைச்சருமான ஸ்ரீ பிரகாஷ் ஜெய்ஸ்வால் கூறுகையில், "ராகுலை பிரசாரத்துக்கு நான் தான் அழைத்து வந்தேன். வேண்டுமானால், எனக்கு எதிராக வழக்கு பதிவு செய்யட்டும் பார்க்கலாம்' என்றார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக