திரிபோலி:கொலைச் செய்யப்பட்ட லிபியாவின் முன்னாள் அதிபர் முஅம்மர் கத்தாஃபியின் ஆதரவாளரும், லிபியா ஸ்டேட் டி.வி யின் நிகழ்ச்சி தயாரிப்பாளருமான ஹாலா அல் மிஸ்ராத்தி தலைநகரில் உள்ள சிறையில் மரணித்த நிலையில் கண்டெடுக்கப்பட்டார். அல் அரேபியா தொலைக்காட்சி இச்செய்தியை வெளியிட்டுள்ளது.
கத்தாஃபி ஆதரவு ஊடக வட்டாரங்கள் செய்தியை உறுதிச்செய்த போதிலும் அரசு கருத்து தெரிவிக்கவில்லை.
கடந்த ஆண்டு கத்தாஃபிக்கு எதிராக லிபியாவில் நடந்த போராட்டத்தை கடுமையான வார்த்தைகளால் விமர்சித்ததன் மூலம் ஹாலா பிரபலமானார். போராட்டங்களை ஆயுதரீதியாக அடக்கி ஒடுக்கும் நடவடிக்கையை கண்டித்த ஐக்கிய நாடுகள் சபைக்கு எதிராக இவர் வெளியிட்ட ஃபத்வாவும் செய்திகளில் நிறைந்து காணப்பட்டது.
2011 ஆகஸ்ட் 24-ஆம் தேதி திரிபோலியில் ஹாலா தேசிய ஆட்சிமாற்ற கவுன்சிலால் கைது செய்யப்படும் காட்சிகள் இணையதளத்தில் தீவிரமாக பரப்பப்பட்டன.
புரட்சியாளர்களுக்கு எதிராக மத சட்டங்களையும், வேலையும் துஷ்பிரயோகம் செய்த ஹாலாவை விசாரணைச் செய்யக் கோரி லிபியாவில் இளைஞர்களின் குழு ஒன்று ஃபேஸ்புக்கில் தனியாக ஒரு பக்கத்தை திறந்தது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக