டெஹ்ரான்:ஈரானை கூடுதல் தனிமைப்படுத்தும் நோக்கத்துடன் நடக்கும் மேற்கத்திய சைபர் தாக்குதலை ஆக்கப்பூர்வமாக எதிர்கொள்வோம் என்று டெஹ்ரான் அறிவித்துள்ளது ஆனாலும்,16 ஆயிரம் கம்ப்யூட்டர்கள் வைரஸ் தாக்குதலால் பாதிக்கப்பட்டுள்ளது. அணுசக்தி செண்ட்ரி ஃப்யூஜ்களுடன்(மையநீக்கி) தொடர்புடைய சில கம்ப்யூட்டர்களிலும் வைரஸ் நுழைந்துள்ளது. இத்தகைய வைரஸ்களை
அழிப்பதற்கு மேற்கத்திய ஆண்டி வைரஸ் சாஃப்ட்வெயர்கள் தேவை. ஆனால், தடை அமுலில் இருப்பதால் அத்தகைய சாஃப்ட்வெயர்களை இறக்குமதி செய்யமுடியாது. இச்சூழலில் உள்ளூரில் தயாரிக்கப்பட்ட சாஃப்ட்வெயர்களை உபயோகித்து வைரஸ்களை எதிர்த்து போராடுவதாக உளவுத்துறை வட்டாரங்களை மேற்கோள்காட்டி ஃபார்ஸ் செய்தி ஏஜன்சி அறிவித்துள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக